தொழிற்சங்க போராட்டம் என்ற அஸ்திரத்தை ஏவ வேண்டிய தருணமா இது?
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் இச்சமயத்தில் அரசியல் அக்கப்போர் தொழிற்சங்கப் போராட்டமாகவும் வேறு வடிவம் எடுக்கும் தோற்றம் - போக்கு - தென்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் இச்சமயத்தில் அரசியல் அக்கப்போர் தொழிற்சங்கப் போராட்டமாகவும் வேறு வடிவம் எடுக்கும் தோற்றம் - போக்கு - தென்படுகின்றது.
மாகாணசபைக்கு வழங்கப்பட்டிருந்த சுகாதார அதிகாரமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்பதையே சாவக்கச்சேரி வைத்தியசாலை சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச்சட்டம் கேலிக்கூத்தாக மாறியுள்ளது.
தென்னிலங்கை அரசியல் களத்தில் இன்றளவிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘குள்ளநரி’யாகவே கருதப்படுகின்றார். காத்திருந்து ‘அரசியல்’ வேட்டையாடுதல், கால ஓட்டத்துக்கேற்ப காய்நகர்த்தல் என அரசியலில் அத்தனை அம்சங்களும் அவருக்கு கைவந்த கலை.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ பதவிகாலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சட்டவியாக்கியானம் வழங்கும்வரை ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
“ சிறுபான்மையின மக்கள், இரண்டாந்தர பிரஜைகள் என இந்நாட்டில் எவரும் இல்லை. அனைவரும் இலங்கையர்கள். அனைவருக்கும் சம உரிமைகள் உள்ளன. தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் சம உரிமையை மக்கள் உணரும் வகையில் ஏற்பாடுகள் இடம்பெறும்.”
போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட வன்னியில் ஓராண்டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழியின் அகழ்வுப் பணிகள், கடந்த எழு மாதங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளமையால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று (04) முதல் எதிர்வரும் பத்து நாட்களுக்கு அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பிரதான பிரச்சினையாக உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு தொடர்பில் ஆட்சியாளர்கள் வெளிப்படைதன்மையுடன் செயற்பட வேண்டும் - என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
மிகமுக்கியமான ஒரு காலகட்டத்திலே தமிழர்களுடைய பெரும் தலைவராக இருந்த சம்பந்தன் இனத்தை விட்டுப் பிரிந்திருக்கின்றார். வயது மூப்புக் காரணமாக அவரின் பிரிவு எதிர்பார்க்கப்பட்டதுதான். அண்மைய காலத்தில் இனத்திற்கு சரியான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு அவரது உடல்நிலை இடம் கொடுக்கவில்லை என்பதும் வாஸ்தவம்தான்.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து முற்றாக மீண்டிருக்கின்றது என்று அறிவித்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
அரசியலில் கோலோச்சியிருந்த காலப்பகுதியில் உறுப்பினர்களை விலைக்கேனும் வளைத்துபோட்டு கட்சிகளை இரண்டாக உடைப்பது – பிளவுபடுத்துவது ராஜபக்சக்களுக்கு கைவந்த கலையாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்தார்கள், ஜே.வி.பியை பிளவுபடுத்தினார்கள். ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்கூட கை வைத்தார்கள்.