மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதே நல்லிணக்கத்துக்கு வழி
வடக்கு - கிழக்கில் இருந்து படை முகாம்களையும், பொலிஸ் நிலையங்களையும் அகற்றி தமிழீழம் அமைப்பதற்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று சிங்கள ராவய அமைப்பின் உறுப்பினரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்திருக்கின்றார்.