You are currently viewing அரசியல் தீர்வு விடயத்தில் மோடியின் அணுகுமுறை எவ்வாறு அமையும்?

அரசியல் தீர்வு விடயத்தில் மோடியின் அணுகுமுறை எவ்வாறு அமையும்?

மூன்றாவது தடவையாகவும் இந்தியாவின் பிரதமராக நாளை மறுதினம் சனிக்கிழமையன்று பதவி ஏற்க இருக்கின்றார் நரேந்திர மோடி. இந்தியாவின் சரித்திரத்தில் நேருவுக்கு பின்னர் இந்தச் சாதனையைப் படைக்கப் போகின்றவர் நரேந்திர மோடிதான்.

75 வயதாகும் நரேந்திர மோடிக்கு இதற்கு பின்னர் இப்படி ஒரு வாய்ப்புக் கிடைப்பது துர்லபமே. அதுவும் 75 வயதுக்கு மேல் பதவிகள் இல்லை, அரசியலில் ஓய்வு பெற வேண்டியதுதான் என்று குறிப்பிட்டு அத்வானி வரை மூத்த தலைவர்களை வீட்டுக்கு அனுப்பிய பாரதீய ஜனதா கட்சியில் மோடிக்கு இன்னொரு தடவை இத்தகைய வாய்ப்புக் கிட்டுவதற்கு சந்தர்ப்பம் இருக்கவே இருக்காது என்பது நிச்சயம்.

கடந்த தடவை போல மிகப் பலமான நிலையில் இம்முறை அவர் ஆட்சியை அமைக்க முடியாது. கூட்டுக் கட்சிகளின் தயவில்தான் ஆட்சியை அவர் கொண்டிழுக்க வேண்டும். இந்தச் சமயத்தில் – இந்தக் கடைசி வாய்ப்பில் – நல்லது செய்ய தமக்குக் கிடைத்த கடை சிச் சந்தர்ப்பத்தை – அவர் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க விரும்புகிறோம்.

‘இந்துத்துவா’ என்ற பெயரில் அவரது தரப்பு கிளப்பிய உச்ச மதவாதத்தின் பெறுபேறு எதுவரையில் என்பதை இப்பொழுது அவர் உணர்ந்து கொள்ள வாய்ப்புக் கிட்டியிருக்கும் என்று நினைக்கிறோம். இந்தத் தேர்தல் பெறு பேறுகள் அதனை அவருக்கும் அவரது சகாக் களுக்கும் நன்கு உணர்த்தி இருக்கும். தேர்தல் முடிந்த பின்னர் வெளியான கருத் துக்கணிப்பு 350 க்கு மேற்பட்ட தொகுதிக ளில் அவரின் பாரதீய ஜனதாக் கட்சி தலை மையிலான கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்திருந்தது. ஆனால் ஆக 292 இடங்கள் மட்டுமே கிடைத்தன. எண்பது தொகுதிகள் கொண்ட உத்தரப்பிர தேசத்தை தங்களின் கோட்டை என பாரதீய ஜனதாக் கட்சி கருதி இருந்தது.

2014 மற்றும் 2019 தேர்தல்களில் அத்தகைய வெற்றியை அக்கட்சிக்கு உத்தரப்பிரதேசம் தந்தது. ஆனால் இம்முறை உத்திரப்பிரதேசம் அந்த உத்தரவாதத்தை பாரதீய ஜனதாவுக்கு வழங்காமல் காலை வாரிவிட்டது.
இந்துத்துவா கொள்கையை கையில் எடுத்த பாரதீய ஜனதாவுக்கு ராமர் கோயிலைக் கட்டிய திருந்துவாரா மோடி? சாதனை பெரும் உதவி புரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராமர் கோயிலை உள்ளடக்கிய பைசாபாத் தொகு தியிலும் படுதோல்விதான்.

இப்படி இந்தியா முழுவதும் பாரதீய ஜனதாவுக்கு கிடைத்த பரவலான தோல்வி சொல்லும் செய்தி என்ன? பெரும்பான்மையினரின் பக்கம் நிற்பதல்ல, பாதிக்கப்பட்ட – நீதி மறுக்கப் பட்ட – சிறுபான்மையினரின் பக்கம் நிற் பதுதான் நியாயமானது என்ற அறிவுரையைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் இந்திய மக்கள் பாரதீய ஜனதாவுக்குக் கூற விழைந்திருக்கின்றனர் என்பதே கருத்தாகும்.

வாக்குகளை சுருட்டுவதற்காக பெரும்பான்மையினரின் பக்கம் ‘இந்துத்துவா’ என்ற பெயரில் அணி சேர்வதை விடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் தனது பார்வையை இந்துத்துவாவாதிகள் திருப்பி இருப்பார்கள் எனில், ‘இண்டியா’ கூட்டணியால் தேறியேயிருக்க முடியாது.

அயல் தேசமான இலங்கை விடயத்தில் கூட மோடியும் அவரது அரசும் பாதிக்கப்பட்ட – நலிவுற்ற – நீதியை எதிர்பார்த் திருக்கின்ற – தமிழர் தரப்பு பக்கம் நிற்க வில்லை. தமிழர் நலன் குறித்து இந்தியாவும் இந்திய அரசியல்வாதிகளும் கடந்த 25 ஆண்டுகளாக வாய்ச் சொற்களில் நடிப்பு அரசியலைக் காட்டினார்களே தவிர, அவர்களுக்காக உருப்படியான நடவடிக்கை எதனையும் எடுக்க வில்லை. மாறாக, இலங்கைத் தீவின் பெரும் பான்மையினர் பக்கத்தில் – அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தென்னிலங்கை அரசின் பக்கத்தில் – இலங்கையில் சிறு பான்மையினரை அடக்கி ஒடுக்கின்ற பெரும்பான்மையினர் தரப்போடு – மோடி அரசு நிலையெடுத்திருந்தது. நிலையெடுத்திருக்கின்றது.

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகியும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. எனவே, நீதியை பெற்றுக்கொடுக்க மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் இந்தியாவின் தலையீட்டுடன் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையையாவது – அதாவது 13 ஆவது திருத்தச்சட்டத்தையாவது முழுமையாக அமுல்படுத்த போதுமான அழுத்தங்களை டில்லி , கொழும்புக்கு வழங்க வேண்டும் என தமிழர் தரப்பு கூறுகின்றது.
ஆனால் பூகோள அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் கொழும்பை அரவணைத்து பயணிக்கும் நிலைப்பாட்டையே இந்திய மத்திய அரசு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கோரிக்கை விடுக்குமேதவிர அழுத்தம் கொடுக்கும் அணுகுமுறையை டில்லி பின்பற்றாது.