You are currently viewing நிறைவேற்று அதிகாரம் குறித்து ஜனாதிபதி தற்போது வியாக்கியானம் வழங்குவது ஏன்?

நிறைவேற்று அதிகாரம் குறித்து ஜனாதிபதி தற்போது வியாக்கியானம் வழங்குவது ஏன்?

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் இன்னும் மூன்றரை முதல் நான்கரை மாதங்களுக்குள் பூர்த்தியாகிவிடும். அடுத்து என்ன என்று தெரியாமல் தடுமாற்றத்தில் இருக்கின்றார் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பது தெளிவாக – அப்பட்டமாக – வெளிப்படுகின்றது.

என்ன செய்வது என்று தெரியாமல் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விதமான கருத்தை முன்வைக்கின்றார் அவர். அடிக்கடி வெவ்வேறு விதமான யோசனைத் திட்டங்களை மாறி மாறிப் பறக்க – மிதக்க – விடுகின்றார், வெவ்வேறு பட்டங்களை – பலூன்களை – அவ்வப்போது அவர் அவிழ்த்து விடுகின்றார் என்றெல்லாம் இப்பத்தியில் சுட்டிக்காட்டி வந்துள்ளோம்.

நாடாளுமன்றத்தினதும் ஜனாதிபதியின தும் பதவிக்காலத்தை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பது என்ற திட்டத்தை தமது கட்சியின் செயலாளர் மூலம் அவர் அவிழ்த்து விட்டமையும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.

அந்த யோசனைக்கு நாலாபுறத்திலிருந்தும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியதும் மெல்லப் பின்வாங்கி, திட்டமிட்டபடி ஜனாதிபதி தேர்தல் நடக்கும் என்று இப்போது கூறுகிறார். அப்படி நடந்தால் நல்லதுதான். அந்தத் தேர்தலை ஒட்டிப் புதிய குழப்பக் கருத்து ஒன்றையும் அவர் இப்போது அவிழ்த்து விட்டிருக்கின்றார். வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த வேட்பாளர்கள் எவரும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது தொடர்பில் திட்டவட்டமான கருத்தை முன்வைக்கவில்லை என்ற ஒரு திசை திருப்பல் விவகாரத்தை அவர் இப்போது நகர்த்தியிருக்கின்றார்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சி முறையினால் பல நலன்கள் உள்ளன என்று வேறு அவர் புதிதாக வாதாடவும் தொடங்கி இருக்கிறார்.
யுத்தத்துக்கு மத்தியிலும் நிறைவேற்றதிகார ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ போன்றோரால் சாதிக் கப்பட்டவற்றை அவர் சிலாகித்திருக்கின்றார்.

நிறைவேற்றதிகாரம் கைவசம் இருந்தமையால் யுத்தத்தை மஹிந்த ராஜபக்ஷவினால் வெற்றி கொள்ள முடிந்தது என்றும் அவர் உரைத்திருக்கின்றார். ஆனால், இவையெல்லாம் நடந்த பின்னர்தான், 2010, 2015 ஜனாதிபதித் தேர்தல் ரணிலின் வியாக்கியானம் களில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்ற வேண்டும் என்று அவர் பிரசாரம் செய்தார். அதற்காக ஒற்றைக் காலில் நின்றார்.

இப்போது அந்த அதிகாரத்தை தானே பிரயோகித்துக் கொண்டு, அவர் அந்த ஆட்சி முறை தொடர்பில் வேறு வித மான கதை பேசுகின்றமை வியப்பானது; வினோதமானது. இந்த நாடாளுமன்றத்திலேயே – ‘அறகலய’ போராட்டம் வெடிக்க முன் னரே – நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்குவதற்கு வழி செய்யும் தனிநபர் சட்டப் பிரேரணை ஒன்றை, நாடாளுமன்றத்தில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஜே.வி.பி. தனது ஓர் உறுப்பினர் மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தமையை ஜனாதிபதி ரணில் மறந்து விட்டார் போலும்.

அதேபோல 21 ஆவது அரசமைப்பு திருத்தம் என்ற பெயரில் முதலில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார 2002 ஏப்ரலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை மையை முழுமையாக மாற்றும் ஒரு தனிநபர் சட்டமூலப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தமையையும் ஜனாதிபதி ரணிலுக்கு நினைவில்லை போலும்.

ஜனாதிபதி ரணிலின் தரப்புப்போல் அல்லாமல் அந்த இரண்டு கட்சிகளின தும் சார்பிலும் ஜனாதிபதித் தேர்தலுக் கான வேட்பாளர்கள் எப்போதோ தயார். தங்கள் கட்சி இப்போதைய – இந்த நாடாளு மன்றத்திலும் – தத்தமது கட்சித் தரப்பின் நிலைப்பாடுகளாக, தனிநபர் பிரேரண யாக சமர்ப்பித்த நிலைப்பாட்டை இந் தத் தேர்தலிலும் அவர்கள் பிரதிபலிப்பார் கள் என்பது பெரும்பாலும் உறுதியானது தான்.

அவர்கள் இரண்டு தரப்புகளினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வரும்போது நிச்சயம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்புப் பற்றிய அவர்கள் நிலைப்பாடு அவற்றில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்று குரல் எழுப்பிய அண்மைக்கால அரசியல்வாதிகளில் அந்த விட யத்தை முன்னர் வலியுறுத்திய – தொடர்ந்து வலியுறுத்தி வந்த – மூத்த தலைவர் ரணில் தான்.

இப்போது அந்த அதிகாரத்தை சுவைத்து ரசிக்கும் அவர், அதனால் தம் பழைய நிலைப்பாட்டை புரட்டிப்போட்டு விட்டார் போலும். அதற்கு துணையாக மற்ற ஜனாதிபதி வேட்பாளர்களையும் தவறான முறையில் அவர் வெளிப்படுத்தவும் பார்க்கின்றார் அவர். அவ்வளவுதான்…..!