You are currently viewing அபிவிருத்தியைவிட வடக்கு மக்களுக்கு நீதியே முக்கியம்!

அபிவிருத்தியைவிட வடக்கு மக்களுக்கு நீதியே முக்கியம்!

வடக்கு மக்கள் குறித்து – குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்கள் குறித்து – தமது வட பகுதி விஜயத்தின் போது பல விடயங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுச் சென்றிருக்கின்றார்.

தமது வடக்கு விஜயத்தில் காணி உறுதி வழங்கும் விவகாரமும் முக்கியமானதாக இருந்தமையால் அது குறித்த பிரஸ்தாபித்திருக்கின்றார் ரணில் விக்கிரமசிங்க.
நடந்து முடிந்த பேரழிவு யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசம் வன்னி மண்தான்.

முள்ளிவாய்க்கால் வரை அந்தப் பேரழிவு தொடர்ந்து, அது முற்றுப்பெற்று, 15 வருடங்கள் முடிந்து விட்டன. அந்தப் பேரழிவின் மையமான முல்லைத் தீவு மாவட்டத்தில் வந்து நின்று, யுத்தப் பாதிப்புக் குறித்தும், காணி உறுதியளிப்பு பற்றியும்யும் நீட்டி முழக்கி இருக்கின்றார் ரணில் விக்கிரமசிங்க.

“யுத்தம் காரணமாக இப்பிரதேசத்தில் கட்டடங்கள் அழிந்து போனமையுடன் பலர் தமது காணிகளை விட்டு வெளியேற வேண்டியும் ஏற்பட்டது. அதனால்தான் இங்கு காணி உறுதிக் கையளிப்பு பிரதான மாக இடம்பெறுகின்றது’’ என்ற தமது தத்துவ முத்தை உதிர்த்திருக்கின்றார் நாட்டின் அதி உத்தமர்.

யுத்தத்தால் நேரடியாக – மோசமாக – பாதிக் கப்பட்ட வன்னி மக்களுக்கு முதலில் தேவைப் படுவது அபிவிருத்தியும் காணி உறுதிப் பத்திரமும் அல்ல. முதலில் அவர்களுக்கு தேவைப்படுவது தங்களுக்கும் தங்கள் உறவுகளுக்கும் எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கர வாதத்தின் பேரழிவுகள் தொடர்பில் நீதி.

கொல்லப்பட்ட – பலவந்தமாகக் காணாமலாக்கப்பட்ட – தமது பல்லாயிரம் உறவு களுக்கு நேர்ந்த கதி தொடர்பான உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். பொறுப்புக் கூறல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தண்டனை விலக்களிப்பு என்ற பேரினவாத மேலாதிக்க அடக்குமுறை முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் அவியாது அபிவிருத்திப் பருப்பு பட வேண்டும். அவைதான் முதலாவது முக்கியம். மற்றெல்லாம் பிறகுதான். மீள்குடியேற்றமும், அபிவிருத்தியும், காணி உறுதிக் கையளிப்பும் தேவை தான்.

ஆனால் அதற்கு முந்தைய – முக்கி யமான – பிரதானமான – பொறுப்பை நிறைவேற்றாமல், அதை மூடி மறைத்துக் கொண்டு மீள்குடியேற்றம், நிலக் கையளிப்பு என்று நாடகம் நடத்தும் பேரினவாத மேலாதிக்க ஆளுகை முறைமை குறித்துத் தமிழ் மக்கள் நன்கறிவர்.
தம் வாழிட நிலத்துக்கான உறுதி தங்கள் பெயரில் கிட்டுவதை நாட்டின் முழு மக்களும்தான் வரவேற்பர்.

ஆனால், வடக்கு – கிழக்கு மக்களைப் பொறுத்தவரை – குறிப்பாக வன்னி மக்களைப் பொறுத்தவரை பேரினவாத மேலாதிக்க அடக்குமுறை ஆளுகையிலிருந்து தங்கள் தாயக நிலத்தை முற்றாக விடுவிக்கும் விடுதலைதான் பிரதானமானது, அதன் பின்னர்தான் நில உறுதி பெறும் விடயம். நீதி வழங்குவதிலும், நிலங்களை விடுவிப்பதிலும், முதலாவது பிரதான விடயத்தை மறைத்துக் கொண்டு – மறித் துக் கொண்டு – அதற்கு அடுத்த கட்ட விட யம் தொடர்பில் தமிழர் தாயகம் மண் ணில் வந்து நின்று கொண்டு ஆரவாரம் பண்ணுகின்றார் சிங்கள – பௌத்த தேசத்தின் தலைவர்.

தங்கள் தாயக மண்ணின் விடுதலையைத் தங்களின் வேணவாவாகக் கொண்டு போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களிடம், அபிவிருத்தி என்ற மாயமானைக் காட்டி காரியமாற்ற – சாதிக்க – பார்க்கின்றார் நரித் தந்திரசாலி யான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

கொடூர யுத்தத்தை தமிழர் தேசம் மீது திணித்து, வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பேரழிவையும் போர் நலிவுகளையும் ஏற்படுத்தி, பௌத்த – சிங்கள வெறிப்போக்கு ஆட்சி பீடம் அந்த மக்களுக்கு நீதி செய்யும் அடிப்படை கோட்பாட்டை, கோட்டை விட்டு விட்டு, அபிவிருத்தி, நில உறுதி வழங்கல் என்று காதில் பூச்சுறுற் றும் வேலையை முன்னெடுக்கின்றது என்பது திண்ணம். இந்தப் பாச்சா – பருப்பு – தமிழர் தம் மனதில் அவியாது என்பது சிங்களத்துக்குப் புரிய வேண்டும்.