ஜனாதிபதியின் பதவி காலத்தை ஓராண்டுக்கு நீடிக்க முடியுமா?
அரசமைப்பில் விடப்பட்ட ஒரு தவறைப் பயன்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தமது தற்போதைய பதவிக்காலத்தை இன்னும் ஒரு வருடத்திற்கு சுலபமாக நீடிக்க முடியும் என சில சட்ட வட்டாரங்கள் சுட்டுகின்றன.
அரசமைப்பில் விடப்பட்ட ஒரு தவறைப் பயன்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தமது தற்போதைய பதவிக்காலத்தை இன்னும் ஒரு வருடத்திற்கு சுலபமாக நீடிக்க முடியும் என சில சட்ட வட்டாரங்கள் சுட்டுகின்றன.
இலங்கையில், வாழ்விட மோதல்கள் காரணமாக, கடந்த ஐந்து மாதங்களில் 150க்கும் மேற்பட்ட யானைகள் கொல்லப்பட்டிருக்கின்றன என்று வன உயிரிகள் திணைக்களம் அறிக்கையிட்டிருக்கின்றது.
13 ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பாகத் தமது நிலைப்பாட்டை யாழ்ப்பாணத்தில் வைத்து ஓரளவு தெளிவுபடுத்தியிருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த 03 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழு கூட்டம் நடைபெற்றது. தற்போது நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் மட்டும் அல்ல ஆளுங்கட்சி நாடாளுமன்றக் குழு கூட்டமும் சூடுபிடிக்கின்றது.
மூன்றாவது தடவையாகவும் இந்தியாவின் பிரதமராக நாளை மறுதினம் சனிக்கிழமையன்று பதவி ஏற்க இருக்கின்றார் நரேந்திர மோடி. இந்தியாவின் சரித்திரத்தில் நேருவுக்கு பின்னர் இந்தச் சாதனையைப் படைக்கப் போகின்றவர் நரேந்திர மோடிதான்.
இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல்கள் 1981 ஜூன் 4 அன்று நடத்த ஏற்பாடாகியிருந்தது. தேர்தல் பாது காப்பு நடவடிக்கைகளுக்காக நானூறுக்கும் அதிகமான பொலிஸார் நாட்டின் பல பாகங்களிலிருந்து யாழ்ப்பாணத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மே 26 அன்று வடபிராந்திய பிரதிகப் பொலிஸ் மாஅதிபர் பி. மகேந்திரன் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக பி. டி. குணவர்தனா என்பவர் அடுத்த மூன்று வாரங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் இன்னும் மூன்றரை முதல் நான்கரை மாதங்களுக்குள் பூர்த்தியாகிவிடும். அடுத்து என்ன என்று தெரியாமல் தடுமாற்றத்தில் இருக்கின்றார் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பது தெளிவாக - அப்பட்டமாக - வெளிப்படுகின்றது.
வடக்கு மக்கள் குறித்து - குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்கள் குறித்து - தமது வட பகுதி விஜயத்தின் போது பல விடயங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுச் சென்றிருக்கின்றார்.
பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் வண.கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் பொது மன்னிப்பு வழங்குமாறு மல்வத்து, அஸ்கிரிய , ராமன்ஞ நிகாயா, அமரபுர மகா சங்க சபை பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு கூரகல ரஜமஹா விகாரை தொடர்பான…
செப்டம்பர் அல்லது ஒக்டோபரில் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தல் குறித்துத்தான் இலங்கை அரசியலில் இப்போது அதிகம் பேசப்படுகின்றது. ஆனால் சத்தம் சந்தடியின்றி, அதை முந்திக்கொண்டு, திடீர்ப் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுப்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றன என்று கொழும்பில் விடயமறிந்த உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிடுகின்றன.