அதிஉயர் சபையில் மீண்டும் ‘அசிங்கமான’ சண்டை!
தமது கட்சியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹினி கவிரத்னவை இலக்கு வைத்து இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த, இரட்டை அர்த்த வசனத்தை பயன்படுத்தினார் என சுட்டிக்காட்டி, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியினர் வலியுறுத்தியதால் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.