நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றுவிட்டது – ஆனால் சபாநாயகர்மீதான நம்பிக்கை?
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
கோப் எனப்படுகின்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இதுவரை எழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் நிதி பற்றாக்குறையால் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அலுவலகம் இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்துக்கு மார்ச் 4 ஆம் திகதி அறிவித்துள்ளது என சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன இணைந்து செயற்பட்டால் அது நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயமாக அமையும் எனக் குறிப்பிட்டு புதியதொரு கூட்டணிக்கான யோசனையை மொட்டு கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ள விவகாரம் அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவுகின்றது. இவ்வாறு உஷ்ணமான காலநிலைக்கு மத்தியில் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கும் வைத்தியர்கள்,
சர்ச்சைக்குரிய Human Immunoglobulin கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
“இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான பூகோள அரசியல் போட்டிக்கு மத்தியில் மற்றுமொரு உக்ரைனாக மாறுவதற்கு இலங்கை தயாரில்லை என்ற விடயத்தை இந்தியாவிடம் நாம் தெரிவித்துள்ளோம்.”
“ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை இன்னும் நிறைவேற்றவில்லை. இங்கு நீதி கிடைப்பதற்கான சாத்தியமும் இல்லை, எனவே, சர்வதேச சமுகம் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டும். சர்வதேச மேற்பார்வையுடன் எமக்கு நீதி வேண்டும்.”
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்த வேண்டுமெனில் தற்போதைய நாடாளுமன்றம் மே 13 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் கலைக்கப்பட வேண்டும் என்று சட்டத்துறை பேராசிரியரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவென்பது படையினரை பலிகடாவாக்கும் பொறிமுறை அல்ல. அதேபோல ஜெனிவாவை ஏமாற்றுவதற்கான கண்துடைப்பு நாடகமும் அல்ல, எமது பிரச்சினைiயை நாமே தீர்க்க கூடிய வகையிலான பொறிமுறையொன்றை உருவாக்குதலாகும் - என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.