சர்வதேச மனித உரிமைகள் தினம் தமிழர் பிரதேசத்தில் ‘துக்க தினம்’

யுத்தம் நிறைவடைந்த தருவாயில், இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் கதி என்னவென்பதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி வன்னியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பினால், சர்வதேச மனித உரிமைகள் தினம் துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

Continue Readingசர்வதேச மனித உரிமைகள் தினம் தமிழர் பிரதேசத்தில் ‘துக்க தினம்’

மூவின மக்களும் இணைந்து தீர்வை கண்டால் அது மாபெரும் வெற்றி!

" இலங்கையில் மூவின மக்களுடனான பேச்சு மூலம் தீர்வு கிடைத்தால் - அரசமைப்பில் மாற்றம் ஏற்பட்டால் அது மாபெரும் வெற்றி யாகும்.” - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

Continue Readingமூவின மக்களும் இணைந்து தீர்வை கண்டால் அது மாபெரும் வெற்றி!

தமிழர்களை இலக்கு வைத்து கொழும்பில் பொலிஸ் பதிவா? பின்னணி என்ன?

" போர் இல்லாத சூழ்நிலையிலும் கொழும்பில் தமிழர்களை இலக்கு வைத்து மீண்டும் பொலிஸ் பதிவு இடம்பெறுகின்றது. இலங்கை பொலிஸ் இராஜ்ஜியமா? கிராம அதிகாரிகளின் செயலை எதற்காக பொலிஸார் செய்ய வேண்டும்? இந்த பதிவு நடவடிக்கை உடன் நிறுத்தப்பட வேண்டும்."

Continue Readingதமிழர்களை இலக்கு வைத்து கொழும்பில் பொலிஸ் பதிவா? பின்னணி என்ன?

இருண்டது இலங்கை! இழப்பு எவ்வளவு? உள்ளக விசாரணை ஆரம்பம்!

இலங்கையின் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நாடு முழுவதும் நேற்று மின் விநியோகம் தடைப்பட்டது. இதனால் பல மணித்தியாலங்கள் நாடு இருளில் மூழ்கியது. போக்குவரத்து உள்ளிட்ட பல அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டன. மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

Continue Readingஇருண்டது இலங்கை! இழப்பு எவ்வளவு? உள்ளக விசாரணை ஆரம்பம்!

‘நிலைமாறுகால நீதி’ – சுயாதீன ஆணைக்குழுவை நிறுவ ஏற்பாடு

நிலைமாறுகால நீதி மற்றும் யுத்தத்திற்குப் பின்னரான நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாக, உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவ அரசு தீர்மானித்துள்ளது.

Continue Reading‘நிலைமாறுகால நீதி’ – சுயாதீன ஆணைக்குழுவை நிறுவ ஏற்பாடு

புலம்பெயர் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை

புலம்பெயர் அமைப்புகள்மீதான தடையை நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வெளிவிவகாரக் கொள்கையின்போது இந்தியாவுக்கு இலங்கை முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

Continue Readingபுலம்பெயர் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை

“ஐ.நாவுக்காக நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுக்க முடியாது”

" இலங்கையின் இறையாண்மையைக் காட்டிக்கொடுத்துவிட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் தேவைக்கேற்ப நாட்டை நிர்வகிப்பதற்கு தயாரில்லை." - என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். " ஐக்கிய…

Continue Reading“ஐ.நாவுக்காக நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுக்க முடியாது”

வடக்கு, கிழக்கு பிரிந்தால் என்ன நடக்கும்?

தமிழ் ஈழம் அமைவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நாட்டில் மீண்டுமொரு போர் ஏற்பட்டால் தமிழ் எம்.பிக்களை வெளிநாடு தப்பிச்செல்லவும் விடமாட்டோம் - என்று சூளுரைத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர்.

Continue Readingவடக்கு, கிழக்கு பிரிந்தால் என்ன நடக்கும்?

பொலிஸ்மா அதிபர் நியமனமும் – அரசியல் மயமாக்கலும்….!

பொலிஸ்மா அதிபர் பதவி என்றால் என்ன என்பது தொடர்பில் விவாதிப்பதற்கு சரியான தருணம் வந்துள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Continue Readingபொலிஸ்மா அதிபர் நியமனமும் – அரசியல் மயமாக்கலும்….!

3 ஆண்டுகளுக்குள் முற்றுபெறும் மீள்குடியேற்றம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அடுத்த மூன்று வருடங்களுக்குள் மீள்குடியேற்ற நடவடிக்கையை முற்றாக நிறைவுசெய்வதற்கு அரசு எதிர்பார்த்துள்ளது - என்று ஆளுங்கட்சி பிரதம கொடறாவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

Continue Reading3 ஆண்டுகளுக்குள் முற்றுபெறும் மீள்குடியேற்றம்!