நாடாளுமன்ற குழுக்களிலிருந்து அலி சப்ரி ரஹீம் இடைநிறுத்தம்
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை நாடாளுமன்றத்தில் இயங்கும் அனைத்து குழுக்களிலிருந்தும் இடைநிறுத்தும் பிரேரணைக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது.
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை நாடாளுமன்றத்தில் இயங்கும் அனைத்து குழுக்களிலிருந்தும் இடைநிறுத்தும் பிரேரணைக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது.
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐ.நாவுக்கு சென்று ஜனநாயகம் பற்றி பேசினாலும், அவர் தலைமையிலான அரசு நாட்டில் ஜனநாயகத்தை ஒடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது என்பதையே புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமூலம் காண்பிக்கின்றது. எனவே, எந்த வடிவிலும் பயங்கரவாத தடைச்சட்டம் தேவையில்லை. அது நீக்கப்பட வேண்டும்."
நாட்டில் 'சிஸ்டம்' சரியில்லை. என்னை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம்கூட இதனையே பிரதிபலிக்கின்றது. - என்று நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
" ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசு முற்படுமானால் நாட்டில் நிர்வாகக்கட்டமைப்பு முழுமையாக சீர்குலையும். சர்வதேச மட்டத்தில் எந்தவொரு சட்டப்பூர்வமான நகர்வுகளிலும் ஈடுபடமுடியாமல்போகும்."
“உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதலைப் பின்னணியாகக் கொண்டு ‘சனல் 4’ அலைவரிசை ஒளிபரப்பி இருக்கும் விடயங்கள் தொடர்பில் உண்மையை அறிந்துகொள்ளும் பூரண உரிமை இந்த நாட்டு மக்களுக்கு இருக்கின்றது. அதனால் அது தொடர்பான விசாரணைகளைத் தாமதிக்காமல் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான நிபுணர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும் என அரசைக் கேட்டுக்கொள்கின்றேன்.”
" அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள ஒத்திசைவு பட்டியலை நீக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. 13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் நாடாளுமன்றம் அனுமதிக்கும் விடயத்தை மட்டுமே ஜனாதிபதி செயற்படுத்துவார்." - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெற்ற போது, கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமென இந்தியாவும் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என சீனாவும் வலியுறுத்தியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச நெறிமுறைகளைப் பின்பற்றி, சர்வதேச கண்காணிப்புடன்தான் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது கத்தோலிக்க திருச்சபை.
" இலங்கையர்கள் பிளவுபட்டு நிற்பதால்தான் உள்ளக விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுகின்றது. எனவே, இலங்கையர்களாக முன்னோக்கி செல்ல டயஸ்போராக்கள் முன்வர வேண்டும்." - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளிலேயே உலக சனத்தொகையில் 41 வீதமானவர்கள் வாழ்வதுடன், உலகின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 24 வீதம், சகல உலக சந்தை செயற்பாடுகளில் 16 வீத செயற்பாடுகள் இடம்பெறுவதாக சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் இலங்கை மத்திய வங்கியின்