ரோஹித அபேகுணவர்தன பதவி விலகுவதே ‘கோப்’ குழுவுக்கு கிடைக்கும் ‘கௌரவம்’!
கோப் எனப்படுகின்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இதுவரை எழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.
கோப் எனப்படுகின்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இதுவரை எழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் நிதி பற்றாக்குறையால் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அலுவலகம் இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்துக்கு மார்ச் 4 ஆம் திகதி அறிவித்துள்ளது என சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவுகின்றது. இவ்வாறு உஷ்ணமான காலநிலைக்கு மத்தியில் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கும் வைத்தியர்கள்,
சர்ச்சைக்குரிய Human Immunoglobulin கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இருந்து விசேட செய்தியொன்று வெளியானது. ‘கோப்’ குழு எனப்படும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்
இலங்கை அரசியலில் என்றுமில்லாதவாறு இம்முறை கூட்டணிகள் உதயமாகி, அரசியல் களத்தில் குவிந்துவருகின்றன. தேசிய மட்டத்திலான தேர்தலை இலக்குவைத்தே இதற்கான நகர்வுகள் இடம்பெற்றுவருகின்றன.
மலர்ந்துள்ள 2024 ஆம் ஆண்டென்பது ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் வருடமாகும். மக்களின் இறையாண்மையின்கீழ் அனைத்து நிறைவேற்று அதிகாரங்களையும் பிரயோகிப்பதற்காக பிரதிநிதியொருவரை ஐந்து வருடங்களுக்கு தெரிவுசெய்வதையே ஜனாதிபதி தேர்தல் ஊடாக நாம் செய்கின்றோம்.
இலங்கையில் பாதாள குழுக்களால் அரங்கேற்றப்படும் குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. மக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டுவருகின்றனர். நாட்டில் குற்ற அலை வீசும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானது என பலரும் கருதுகின்றனர். எனினும், அரசியலமைப்பின் 41ஆ.(1) மற்றும் 61ஈ(ஆ) ஏற்பாடுகளின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
1994 ஆம் ஆண்டை அடிப்படையாகக்கொண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜுலை 20 ஆம் திகதியளவில் பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இது சாத்தியமா? தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில்…