தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அனைவருக்கும் சம உரிமை!

இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் விரைவில் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. வடக்கு, கிழக்கு மக்களின் ஆணை இல்லாத ஆட்சி நாட்டை முன்னேற்றாது. ஆகையினால் அனைத்து மக்களின் ஆணையுடனான ஆட்சி அமையப் பெற வேண்டும்.

Continue Readingதேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அனைவருக்கும் சம உரிமை!

ஜனாதிபதி, பொதுத்தேர்தல் என்பன ஒரே நாளில்?

இலங்கையில் தெற்கு அரசியல் கொதிநிலையிலேயே காணப்படுகின்றது. இது தேர்தல் வருடம் என்பதால் அரசியல் கட்சிகளும் விழிப்பாகவே உள்ளன. எனினும், முதலில் எந்த தேர்தல் நடைபெறும் என்ற குழப்பம் இன்னும் நீடிக்கின்றது.

Continue Readingஜனாதிபதி, பொதுத்தேர்தல் என்பன ஒரே நாளில்?

அறகலய ‘வெளிநாட்டு சூழ்ச்சியா’? விசாரிக்க தெரிவுக்குழு கோருகிறார் விமல்!

அறகலய காலப்பகுதியில் இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

Continue Readingஅறகலய ‘வெளிநாட்டு சூழ்ச்சியா’? விசாரிக்க தெரிவுக்குழு கோருகிறார் விமல்!

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு? நாடாளுமன்றில் யோசனை!

சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் கோரிக்கை விடுத்துள்ளார்.

Continue Readingஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு? நாடாளுமன்றில் யோசனை!

முதலில் ஜனாதிபதி தேர்தல்: மே தின கூட்டத்தோடு பிரசாரம் ஆரம்பம்

மே தின கூட்டத்தோடு தேர்தல் பிரச்சார நடவடிக்கையை முழுவீச்சுடன் முன்னெடுப்பதற்கு தென்னிலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்துவருகின்றன.

Continue Readingமுதலில் ஜனாதிபதி தேர்தல்: மே தின கூட்டத்தோடு பிரசாரம் ஆரம்பம்

வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டமை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு!

நீதிமன்ற உத்தரவை மீறி சைவ சமய வழிபாடுகளை நடத்தினர் என குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் சைவர்கள் குழுவொன்று, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளன.

Continue Readingவழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டமை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு!

வடக்கில் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வு அவசியம் – அநுர

“மாகாணசபை முறைமை ஊடாக தமது அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என தமிழ் மக்கள் கருதும்பட்சத்தில் அந்த வியூகம் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன், வடக்கில் அரசியல் பிரச்சினை, மக்கள் பிரச்சினையென இரு பிரச்சினைகள் உள்ளன. அவை தீர்க்கப்பட வேண்டும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Continue Readingவடக்கில் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வு அவசியம் – அநுர

நம்பிக்கையில்லாப் பிரேரணைகளால் நம்பிக்கையிழக்கும் நாடாளுமன்றம்!

சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது கடந்த 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

Continue Readingநம்பிக்கையில்லாப் பிரேரணைகளால் நம்பிக்கையிழக்கும் நாடாளுமன்றம்!

பிரதமர் சீனா பயணம் – டில்லி செல்ல தயாராகும் சாகல: பின்னணி என்ன?

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் குறித்து கலந்துரையாடல் இவ்வாரம் இடம்பெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை டெல்லிக்குச் செல்கிறார்.

Continue Readingபிரதமர் சீனா பயணம் – டில்லி செல்ல தயாராகும் சாகல: பின்னணி என்ன?

வெடுக்குநாறிமலை விவகாரம்: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுவது என்ன?

வெடுக்குநாறி மலையில் கோவில் இல்லை. 2023 ஆம் ஆண்டிலேயே அங்கு சிவலிங்கமொன்று வைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அநுராதபுர யுகத்துக்குரிய விகாரையொன்று இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளது – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

Continue Readingவெடுக்குநாறிமலை விவகாரம்: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுவது என்ன?