இணைய வழி ‘தலை’யிடியும் – ‘சட்ட ஏற்பாடு’ எனும் தைலமும்!
'நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம்' எனப்படும் இணையம் தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்கான சட்டமூலம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அது நேற்று (03) நடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இச்சட்டமூலம் தொடர்பில் மக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 14 நாட்களுக்குள் (நேற்றிலிருந்து) உயர் நீதிமன்றம் செல்வதற்கு அவகாசம் உள்ளது.