புதிய பயங்கரவாத தடைச்சட்டம் மீளப்பெறப்படுமா?
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்மீளப்பெறப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்மீளப்பெறப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டது எனவும், வெறும் சட்டமூலத்தால் மாத்திரம் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் தெரிவித்தார். " நல்லிணக்கம் என்பது மனங்களில் இருந்து எழ…
" நாட்டில் நல்லிணக்கத்துக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பௌத்த பிக்குகளே தடையாக உள்ளனர் என்ற கருத்து சர்வதேச மட்டத்தில் பரப்படுகின்றது. இது தவறு. 99 சதவீதமான பௌத்த பிக்குகள் சமாதானத்தையே விரும்புகின்றனர்."
" நாடு வங்குரோத்து அடைந்து, மக்கள் திண்டாடும் நிலையில் அதற்கு தீர்வை தேடாமல் செங்கடல் பாதுகாப்பு நடவடிக்கைக்கு 250 மில்லியன் ரூபா செலவில் கடற்படை கப்பலை அனுப்ப அரசு முயற்சிப்பதன் நோக்கம் என்ன? இதன்மூலம் நாட்டுக்கு கிடைக்கும் நன்மைதான் என்ன?"
உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவானது படையினரைக் காட்டிக்கொடுக்கும் செயலாகும். எனவே, இது தொடர்பான சட்டமூலத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கக்கூடாது என கடும் போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளின் கூட்டணியான தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது. எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
" தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டால் மாத்திரமே இலங்கையால் ஒரு நாடாக முன்னோக்கி செல்ல முடியும்." - என்று வலியுறுத்தியுள்ளார் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய.
வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் 2024 ஆம் ஆண்டிலும் தொடர்கின்றது.
உலகத் தமிழர் பேரவை (GTF) மற்றும் அமரபுர நிக்காயவின் அனுநாயக்க தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர்கள் குழு தொகுத்த "இமயமலைப் பிரகடனம்" என்ற ஆவணம் இலங்கை அமரபுர மகா சங்க சபையின் கருத்து அல்லவென அந்த சங்க சபையின் உதவிப் பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டானது இலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளின் தலைவிதியை நிர்ணயிக்கபோகும் ஆண்டாக அமையவுள்ளது. இதனால் அரசியல் ரீதியிலான பலப்பரீட்சைகளை எதிர்கொள்ள கட்சிகள் தயாராகிவருகின்றன.