ஜனாதிபதி, பொதுத்தேர்தல் என்பன ஒரே நாளில்?
இலங்கையில் தெற்கு அரசியல் கொதிநிலையிலேயே காணப்படுகின்றது. இது தேர்தல் வருடம் என்பதால் அரசியல் கட்சிகளும் விழிப்பாகவே உள்ளன. எனினும், முதலில் எந்த தேர்தல் நடைபெறும் என்ற குழப்பம் இன்னும் நீடிக்கின்றது.
இலங்கையில் தெற்கு அரசியல் கொதிநிலையிலேயே காணப்படுகின்றது. இது தேர்தல் வருடம் என்பதால் அரசியல் கட்சிகளும் விழிப்பாகவே உள்ளன. எனினும், முதலில் எந்த தேர்தல் நடைபெறும் என்ற குழப்பம் இன்னும் நீடிக்கின்றது.
அறகலய காலப்பகுதியில் இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
மே தின கூட்டத்தோடு தேர்தல் பிரச்சார நடவடிக்கையை முழுவீச்சுடன் முன்னெடுப்பதற்கு தென்னிலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்துவருகின்றன.
நீதிமன்ற உத்தரவை மீறி சைவ சமய வழிபாடுகளை நடத்தினர் என குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் சைவர்கள் குழுவொன்று, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளன.
“மாகாணசபை முறைமை ஊடாக தமது அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என தமிழ் மக்கள் கருதும்பட்சத்தில் அந்த வியூகம் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன், வடக்கில் அரசியல் பிரச்சினை, மக்கள் பிரச்சினையென இரு பிரச்சினைகள் உள்ளன. அவை தீர்க்கப்பட வேண்டும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் குறித்து கலந்துரையாடல் இவ்வாரம் இடம்பெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை டெல்லிக்குச் செல்கிறார்.
வெடுக்குநாறி மலையில் கோவில் இல்லை. 2023 ஆம் ஆண்டிலேயே அங்கு சிவலிங்கமொன்று வைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அநுராதபுர யுகத்துக்குரிய விகாரையொன்று இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளது – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன இணைந்து செயற்பட்டால் அது நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயமாக அமையும் எனக் குறிப்பிட்டு புதியதொரு கூட்டணிக்கான யோசனையை மொட்டு கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ள விவகாரம் அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
“இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான பூகோள அரசியல் போட்டிக்கு மத்தியில் மற்றுமொரு உக்ரைனாக மாறுவதற்கு இலங்கை தயாரில்லை என்ற விடயத்தை இந்தியாவிடம் நாம் தெரிவித்துள்ளோம்.”
“ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை இன்னும் நிறைவேற்றவில்லை. இங்கு நீதி கிடைப்பதற்கான சாத்தியமும் இல்லை, எனவே, சர்வதேச சமுகம் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டும். சர்வதேச மேற்பார்வையுடன் எமக்கு நீதி வேண்டும்.”