“வீடு செல்லும் வழியில் ‘அடிவாங்க’ வாருங்கள்…”
'சூப்பர் மார்க்கெட்' வலையமைப்பொன்றுக்கு உரித்தான பொரளை பகுதியிலுள்ள கிளையொன்றுக்கு கடந்த 22 ஆம் திகதி சென்றிருந்த யுவதியொருவர், ஊழியர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய காணொளி சமூகவலைத்தளங்களில் தற்போது பரவியுள்ளது. இச்சம்பவம் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகவும் மாறியது. தாக்குதல் நடத்திய 4 பெண் ஊழியர்களும், மூன்று ஆண் ஊழியர்களும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு சட்ட ரீதியிலான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.