ஜெய்சங்கரின் சீன பயணம்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மேற்கொண்ட சீன பயணம் உலக அரசியல் அரங்கில்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தற்போதைய தலைவராக சீனா உள்ள
நிலையில், அவ்மைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் கடந்த 15ஆம் திகதி
ஆரம்பித்து இரண்டு நாட்கள் நடைபெற்றிருந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜெய்சங்கர்
சீனாவுக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
சீனாவில் ஐந்து ஆண்டுகளின் பின்னர் காலடி எடுத்து வைத்த ஜெய்சங்கர், அந்நாட்டின் துணை ஜனாதிபதி
ஹான் ஜெங்கை முதலில் சந்தித்திருந்தார். அப்போது, இந்தியா – சீனா இடையேயான உறவு தொடர்ந்து
இயல்பு நிலையில் இருக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதன்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்; வெற்றிகரமான சீனத் தலைமையை இந்தியா ஆதரிக்கிறது
என்று தெரிவித்த ஜெய்சங்கர், அதில் பங்கேற்க இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
சர்வதேச நிலைமை மிகவும் சிக்கலானதாக உள்ள நிலையில், அண்டை நாடுகளாகவும் பெரிய
பொருளாதாரங்களாகவும் உள்ள இந்தியாவும் சீனாவும் வெளிப்படைத் தன்மையுடன் கருத்துக்களைப்
பரிமாரிக்கொள்வது மிகவும் முக்கியமென ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். அச்சந்திப்பில் இந்திய, சீன
இருதரப்பு உறவுகளின் அண்மைய வளர்ச்சி குறித்து ஜனாதிபதி ஷி ஜின்கிடம் விளக்கினேன். அந்த வகையில்
எமது தலைவர்களின் வழிகாட்டுதலை மதிக்கிறேன்’ என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, சீனாவுக்கான விஜயத்தினை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
அஜித் தோவல் ஆகியோரின் மேற்கொண்டிருந்தனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது ஜெய்சங்கர் சீனா
சென்றிருப்பது இங்கு முக்கிய விடயமாகும்.
பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல முக்கிய நாடுகள் இந்த சந்திப்பை
ஆழமாக உற்றுநோக்கியுள்ளன. ஜெய்சங்கரின் இப்பயணம் இலக்கு வைத்திருந்தது வெறும் இருதரப்புச்
சந்திப்புகளாக மட்டுமல்லாமல், ஒரு வலுவான சர்வதேச கூட்டு அரசியல் தூண்டுகோலாகவும் மாறியுள்ளது.
இந்தியா-சீனா உறவுகள் கடந்த ஒரு தசாப்தமாக வலுவான விசைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 2020லடாக்
எல்லையில் ஏற்பட்ட இரத்தமின்றி நடைபெற்ற மோதல்கள் இரு நாடுகளின் நம்பிக்கையையும் பாதித்தன.
இதனைத் தொடர்ந்து இருநாட்டிலும் கடுமையான தடுப்புப் படைகள் குவிக்கப்பட்டன. இதையடுத்து பல
சுற்றுக்களில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் நிலையான முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில், ஜெய்சங்கரின் சீனா பயணம் சமாதானத்தின் தூதாகவே பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கும்
மேலாக, இப்பயணம் உலக நாடுகளுக்கு சில முக்கியமான அரசியல் சமிக்ஞைகளையும்
வெளிப்படுத்தியிருக்கிறது. முதலாவதாக, இந்தியா எல்லை விவாதங்களில் ஒருபுறமாகவே பலப்படாது,
உரையாடலை முன்னிலைப்படுத்தும் நாடாக செயற்படும் என்பது வெளிப்படையாக
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் சீனாவுடன் ‘யுடட றுநயவாநச ளுவசயவநபiஉ யுடடயைnஉந’ என்ற பெயரில் நட்புறவை
மேற்கொண்டு வருகிறது. சீனாவின் பாகிஸ்தானுக்கான முதலீடுகள் மற்றும் சீன-பாக்கிஸ்தான் பொருளாதார
வழித்தடம் இந்தியாவை தொடர்ச்சியாக எச்சரிக்கையுடன் இருப்பதற்கான நிலைமையை உருவாக்கி
வைத்துள்ளது.
ஜெய்சங்கரின் சந்திப்புக்கள் மூலம் இந்தியா பாகிஸ்தான் ஊடாக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுப்பது
பயனில்லை. எல்லை விவகாரங்களில் இந்தியா உறுதியோடும், அரசியல் நுணுக்கத்தோடும் செயல்படும் என்ற
ஒரு நேரடி செய்தியை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியா சமீப காலங்களில் குவாட் (நாற்கர நாடுகள்), மற்றும் மத்திய கிழக்கு மூலோபாயக்கூட்டாகும். இந்தக்
கூட்டானது, மேற்கத்திய கூட்டணிகளுடன் வலுவான நட்புறவை வைத்திருக்கும் போதிலும், சீனாவுடனான
உரையாடல் முற்றிலும் தவிர்க்கப்படவில்லை என்பது முக்கியமானது.

இது அமெரிக்காவுக்கு அனுப்பும் முக்கியமான செய்தியாகும். இந்தியா, ‘ஒரேநாடு மண்டலம் முன்முயற்சி’
விடயத்தில் உலக அரசியலில் தனது சுயாதீனப்பாதையைத் தொடரும் நாடு என்பதைக் காட்டியது. இது
இந்தியாவின் பல்துருவ அரசியல் அணுகுமுறையை வலுப்படுத்துகிறது.

இதேநேரம், இந்த பயணத்தில் ரஷ்யா மற்றும் மத்திய ஆசியா குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. சீனா-ரஷ்யா
கூட்டணி வலுப்பெற்று வரும் நிலையில் இந்தியா தனது சமநிலை நட்பை வலியுறுத்தியுள்ளது. மத்திய
ஆசியாவில் தங்கள் பங்கு தொடரும் என்பதையும் இந்தியா மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளது.
அதேபோன்று, ஜெய்சங்கரின் இப்பயணத்தின் முக்கிய சதகமான நிலைமை சீனாவின் பக்கமே
காணப்படுகிறது. எல்லை விவகாரங்களில் தங்கள் நிலைப்பாடு மாறமாட்டோம் என்றார் ஜெய்சங்கர்.
அதேசமயம், சர்வதேச வளங்கள், பரஸ்பர வணிகம் ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கு இந்தியா தயாராக
இருப்பதையும் தெளிவுபடுத்தினார். எல்லை மற்றும் வணிகம் தனித்தனியாக அணுகப்பட வேண்டும் என்ற
இந்தியாவின் நிலைப்பாடு உருப்பெற்றது.
இப்பயணம் உள்நாட்டிலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு முக்கியமான அரசியல்
ஆதாயமாக மாறியுள்ளது. வலுவான தேசிய பாதுகாப்பு நிலைப்பாடு மற்றும் சர்வதேச மேடையில் இந்தியா
சமநிலை அரசியல் பின்பற்றுவதை அச்சந்திப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
ஜெய்சங்கரின் பயணத்தின் மூலம் இரு நாடுகளும் போர் வழியைத் தவிர்க்க விரும்புவதை உலக நாடுகள்
இலகுவாக புரிந்துகொள்ள முடியும். இருப்பினும் எல்லை விவகாரங்களில் நிலையான தீர்வு கிடைக்காத
வரையில் இருதரப்பிலும் உண்மையான நம்பிக்கை நிலைக்க வாய்ப்பு குறைவாகவே காணப்படுகின்றது
அதேநேரம் ஜெய்சங்கரின், சீனப், பயணம் இந்தியாவின் பன்முக புள்ளியில் மையமாகும் நோக்கத்தையும்,
சர்வதேச அரங்கில் வலுவான உறவுகளைச் செலுத்தும் திறனைவும் வெளிப்படுத்தியது. இந்தியா ஒரு
‘தனியுரிமை கொண்ட சக்தி’ எனும் தனது அடையாளத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்தியாவும், சீனாவும் நிலைமைகளை உணர்ந்து ‘புதிய உலக ஒழுங்கினை’ ஏற்படுத்துவதைத் தான் இலக்காக
கொண்டிருக்கின்றன. அதுவரையில் பேசுவதற்கு ஒன்றுமில்லை.