காணி உரித்துக்கான கூட்டுப்போரட்டம்

காணி உரித்து நிர்ணயத்திணைக்களத்தினால் காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம்
பிரிவின் கீழ் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2430ஆம் இலக்க
வர்த்தமானி அறிவிப்பை தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த கடும் எதிர்ப்பினால் மீளப்
பெறப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக காணி அமைச்சர் சட்டமா அதிபருடன் கலந்தாலோசிக்கப் போவதாகவும்
அறிவித்துள்ளார். இது தமிழ் மக்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும்.
கூட்டு முயற்சிகளின் மூலம் இயலாத காரியங்களையும் நடைமுறைப்படுத்திக் காட்டலாம்
என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடமாகாணத்திலுள்ள 5940 ஏக்கர் காணி
சுவீகரிக்கப்படவிருந்தது. மூன்று மாத காலத்திற்குள் தகுந்த ஆதாரங்களுடன் உரிமை
கோராது விட்டால் அது சுவீகரிக்கப்படுமெனக் கூறப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் வர்த்தமானி அறிவித்தல் தற்காலிகமாக இரத்துச் செய்வதாக அரசாங்கம்
கூறியிருந்தது. இரத்துச் செய்தல் போதியதல்ல. வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்படல்
வேண்டும் எனத் தமிழ்த் தரப்பு கோரிக்கை விடுத்ததினாலேயே தற்போது அரசாங்கத்தால்
அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது நடைமுறைக்கு வரும் வரை அரசாங்கத்தின் கூற்றை உண்மையென நம்ப முடியாது.
வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் குறிப்பாக கடற்கரையையொட்டி இந்தக் காணிகள்
சுவிகரிக்கப்பட இருந்தன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 3669 ஏக்கர் காணிகளும் , முல்லைத் தீவு மாவட்டத்தில் 1,703
ஏக்கர் காணிகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 515 ஏக்கர் காணிகளும் மன்னர்
மாவட்டத்தில் 543 ஏக்கர் காணிகளும், மன்னார் மாவட்டத்தில் 54 ஏக்கர் காணிகளும்
சுவீகரிக்கப்பட இருந்தன.
அரசாங்கத்தின் இந்த சுவீகரிப்புக்குப் பல காரணங்கள் உள்ளன. இதன் பிரதான
நோக்கம் கட்டமைப்பு சார் குடிப்பரம்பலை மாற்றுவது தான். அதில் மிக முக்கியமானது
நிலப்பறிப்புத்தான். எந்தவொரு மாவட்டத்திலும் தனித்து தமிழர்கள் இருக்கக்கூடாது
என்பதில் அரசாங்கம் மிகவும் கவனமாகவுள்ளது.
சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் நோக்கமும் உண்டு.
எல்லைப்புறங்களையொட்டித்தான் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள முடியும்
என்பதால் காணிகள் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டன.
ஏனைய பிரதேசங்களில் இராணுவக் குடியேற்றங்களை உருவாக்கலாம். கரையோரப்
பிரதேசங்களில் அரசாங்கம் கவனம் செலுத்துவதற்கு காரணம் தமிழ் மக்களுக்கு
உரிமைகளை வழங்காது விட்டால் அவர்கள் எப்போதோவொரு நாள் மீண்டும் போராடத்
தொடங்குவர்.

அதன்போது கடற்பிரதேசங்களே அவர்களுக்கு உதவக்கூடியதாக இருக்கும். அதனைத்
தடுப்பதற்காகவே கரையோரப் பிரதேசங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இராணுவ
முகாம்களை அமைப்பதற்கும் காணிகள் தேவையாக உள்ளன.
தற்போது இராணுவம் பறித்துள்ள காணிகளை விடுவிக்கும்படி கடும் அழுத்தம் தமிழ்
மக்களினாலும் சர்வதேச தரப்பினாலும் விடுக்கப்படுகின்றது. இந்தக் காணிகளை
விடுவித்தால் இராணுவத்திற்கு காணிகள் தேவையாக இருக்கும்.
தவிர வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு காணிகளை வழங்கும் நோக்கமும்
அரசுக்கு உள்ளது. இந்த விவகாரம் தமிழ் அரசியல்வாதிகளின் கண்களில் பெரியளவில்
படவில்லை என்றே கூறவேண்டும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக காணி பறித்தல் என்ற விவகாரமும்
ஆபத்தானவொன்றுதான். வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கும் அதிகாரம் தமிழ்
மக்களுக்கு இல்லாத நிலையில் இந்த முதலீட்டாளர்கள் அரசாங்கத்திற்கு சேவகம்
செய்வார்களே செய்பவர்களாகவே இருப்பர்.
குறைந்தது அரசதரப்பு, தமிழ்த்; தரப்பு, வெளிநாட்டு முதலீட்டாளர் தரப்பு ஆகிய மூவரும்
இணைந்து கைச்சாத்திடப்படுகின்ற ஒப்பந்த மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை
அழைக்கும்; நோக்கமும் அரசுக்கு இல்லை.
வர்த்தமானி அறிவித்தலின்படி காணி உரிமையாளர்கள் 3 மாதத்திற்குள் காணி
உரிமையை நிரூபிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு நிரூபிப்பது
இலகுவானதல்ல. நீண்ட போர் காரணமாக மக்கள் இலட்சக்கணக்கில்
அகதிகளாகியுள்ளனர். அவர்கள் மூன்று மாதத்திற்கு இலங்கை வந்து காணி உரிமைகளை
நிரூபிப்பது என்பது இலகுவானதல்ல.
அவர்களில் பலர் நாட்டிற்கு திரும்ப முடியாத நிலையிலும் உள்ளனர.; பெற்றோர் இறந்த
குடும்பங்களைப் பொறுத்தவரை பிள்ளைகளுக்கு காணிகள் பற்றி எதுவும் தெரியாது. புதிய
தலைமுறைக்கு மொழிப் பிரச்சினையும் உண்டு.
தவிர காணி உறுதிகள் பல போர் காரணமாகவும், சுனாமி காரணமாகவும் அழிந்து
போயுள்ளன. காணிப்பதிவு திணைக்களத்தினால் கூட இதன் பிரதிகளை வழங்க முடியாத
நிலை உள்ளது. யாழ்ப்பாணம் காணிப்பதிவு திணைக்களத்தில் பிரதிகளைக் கேட்டால் பல
அழிந்து போய்யுள்ளன என்றே பதில் வருகின்றது.
இவை தவிர பெற்றோர்கள் இடப்பெயர்வு காரணமாகவும், ஆதனங்களில்
தங்களுக்குபிடி இருக்க வேண்டும் என்பதற்காகவும் தங்களின் பூர்வீக ஆதனங்கள்
பலவற்றை பிள்ளைகளுக்கு கைமாற்றாதுள்ளனர்.
இவ்வாறு கைமாற்றப்படாத ஆவணங்கள் விடயத்தில் அனைத்து பிள்ளைகளும்
கையொப்பமிட்டே ஆதனங்களைக் கைமாற்ற முடியும். பிள்ளைகள் வௌ;வேறு
நாடுகளில் சிதறி வாழும்போது அனைத்து பிள்ளைகளும் கையொப்பமிட்டு ஆதனங்களை
கைமாற்றுவது இலகுவானதொன்றல்ல.

அதுவும் பிள்ளைகளுக்கிடையே முரண்பாடுகள் இருக்குமானால் இது மேலும் இழுபறிக்கு
உள்ளாகும். இத்தகைய காரணங்களினாலும் பல காணிகள் கைமாற்றப்படாதுள்ளன.
பிள்ளைகள் கைமாற்றுவதற்கான செலவினங்களை டொலரில் கணக்குப்; பார்த்தும்
முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பதுண்டு. வெளிநாடுகளில் அற்றோனித்தத்துவம் தயார்
செய்வதற்கு அதிக பணம் செலவிட வேண்டியிருக்கும.; தவிர இலங்கையைப் போல
சட்டத்தரணிகளை அணுகுவதும் அங்கு இலகுவானதொன்றல்ல.
ஆதனங்கள் மட்டுமல்ல சேமிப்புப் பணத்தைப் பற்றிகூட பெற்றோர்கள்
பிள்ளைகளுக்கு தெரிவிக்காத நிலையுண்டு. அவர்கள் இறந்ததும் அப்பணம்
பிள்ளைகளுக்குப் போகாமல் அரசாங்கத்திற்கு செல்லும் நிலையும் உண்டு.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஏனைய சிங்கள
அரசாங்கங்களிலிருந்து வேறுபட்டது. ஏனைய அரசாங்கங்கள் புறரீதியான
சிதைப்பிலேயே அதிகளவில் ஈடுபட்டன. அவற்றின் சிதைப்பு நடவடிக்கைகள் ஏறத்தாழ
நேரடியானதாக இருக்கும். அடையாளம் காண்பதும் இலகுவானவை.
காணிகளைப் பறித்தல், மொழியைப் புறக்கணித்தல், கலாசாரத்தை சிதைத்தல்,
பொருளாதாரத்தை அழித்தல் என்று தேசிய இனத்தை; தாங்கும் தூண்களை; அழிப்பதில்
அவை நேரடியாகவே ஈடுபடும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புறச் சிதைப்பையும், அகச்சிதைப்பையும் சமாந்தரமாக
மேற்கொள்கின்றது. அகச்சிதைப்பு அவ்வாறானதல்ல. ஒரு பக்கத்தில் வர்த்தமானி மூலமும்
குருந்தூர் மலை, உகந்தை முருகன் ஆலயம் என்பவற்றில் நேரடியாகவும் ஆக்கிரமிப்புகளச்
செய்யும் அதேவேளை இனவாதத்திற்கு எதிர், சமத்துவத்திற்கு ஆதரவு
எனக்கூறிக்கொண்டு அரசியல் ரீதியில் கட்சியாக ஆக்கிரமிப்பு செய்வதன் மூலம் தமிழ்
அரசியலை அகரீதியாகவும் சிதைக்கின்றது.
இந்த அகச்சிதைவை தடுப்பதற்கு தமிழ் மக்கள் என்ன செய்யலாம்? என்ற கேள்வி
இங்கு வருகின்றது. இதற்கு ஒரேயொரு மருந்து ஒருங்கிணைந்த அரசியலே. கட்சிகள்
ஒருங்கிணைந்து அரசியலுக்கு வரமாட்டார்கள் என்பதை அறிந்து தற்போது தமிழ் மக்கள்
நிர்ப்;பந்த ரீதியாக ஒருங்கிணைந்த அரசியலுக்கு தள்ளியிருக்கின்றார்கள். இணைந்து
உள்ளூராட்சி நிர்வாகத்தை நடாத்த வேண்டிய நிலையும், தமிழர் தாயகத்தில் சிங்கள
கட்சியான தேசிய மக்கள் சக்தியின் ஆதிக்கமும் இந்த நிர்ப்பந்த அரசியலுக்குள் தமிழ்த்
தேசிய கட்சிகளை தள்ளியுள்ளது.