வட,கிழக்கில் தமிழ் கட்சிகளின் எழுச்சி மக்கள் வாக்களிப்பில் பங்கேற்பதில் வீழ்ச்சி

உள்ளூராட்சி  மன்றங்களுக்கான தேர்தல் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் வடக்கு,கிழக்கில் தமிழ்த் தேசியத் தளத்தில் பயணிக்கின்ற கட்சிகள் தமது வாக்குவங்கியில் எழுச்சி அடைந்திருக்கின்றன. ஆனாலும் தனித்து ஆட்சி அமைப்பதற்கான இயலுமை எந்தவொரு தரப்பிற்கும் காணப்படவில்லை.

குறிப்பாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியானது, பாராளுமன்றத் தேர்தலில் வட,கிழக்கின் எட்டுமாவட்டங்களிலும் 257,813வாக்குளைப் பெற்று 2.31சதவீதமாக கொண்டிருந்த தனது வாக்குவங்கியை இந்தத் தேர்தலில் 307,657வாக்குகளைப் பெற்று 2.96சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதேபோன்று, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியானது பாராளுமன்றத் தேர்தலில் 65,382வாக்குகளைப் பெற்று         0.59சதவீதமாக கொண்டிருந்த தனது வாக்குவங்கியை இத்தேர்தலில் 89,177வாக்குளைப் பெற்று 0.86சதவீதமாக அதிகரித்துள்ளது.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸும் பாராளுமன்றத் தேர்தலில் 33,911வாக்குளைப்பெற்று                0.30சதவீதமாகக் கொண்டிருந்த வாக்குவங்கியை இத்தேர்தலில் 70,944வாக்குகளைப் பெற்று 0.63சதவீதமாக அதிகரித்திருக்கின்றது.

நிலைமைகள் இவ்வாறிருக்கையில், 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 593,187பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தபோதும் 397,041பேரே வாக்கெடுப்பில் பங்கெடுத்திருந்தனர். 196,146வாக்காளர்கள் வாக்கெடுப்பில் பங்கெடுத்திருக்கவில்லை.

அத்துடன் அளிக்கப்பட்ட வாக்குகளில் 371,688வாக்குகளே செல்லுபடியானவையாக இருந்ததோடு, 25,353வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக உள்ளன.

யாழ்;.தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையில் 66.93சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதோடு 93.61சதவீதமான வாக்குகள் செல்லுபடியானவையாக இருந்ததோடு 6.39சதவீதமான வாக்குகள் செல்லுபடியற்றவையாக காணப்பட்டன.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 306,081பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்த நிலையில், 226,650பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருந்தனர். அந்தவகையில் 88,269பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்பதோடு அளிக்கப்பட்ட வாக்குகளில் 217,269வாக்குகள் செல்லுபடியாகியிருந்தன. 9,381வாக்குகள் செல்லுபடியாகியிருக்கவில்லை.

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையில் 74.05சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்ததோடு அவற்றில் 95.86சதவீதமான வாக்குகள் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. 4.14சதவீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக இருக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 449,686பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 327,524பேரே வாக்களிப்பில் பங்கேற்றிருந்ததோடு 122,162பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கவில்லை. அளிக்கப்பட்ட வாக்குகளில் 318,648வாக்குகளே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 8,876வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையில் 72.83சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தோடு அவற்றில் 97.297சதவீதமான வாக்குகள் செல்லுபடியானவையாகவும் 2.71சதவீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாகவும் காணப்படுகின்றன.

திருகோணமலை மாவட்டத்தில் 315,925பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 245,282பேரே வாக்களிப்பில் பங்கேற்றிருந்ததோடு 70,643பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கவில்லை. அளிக்கப்பட்ட வாக்குகளில் 239,461வாக்குகளே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 5,821வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையில் 77.64சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தோடு அவற்றில் 97.63சதவீதமான வாக்குகள் செல்லுபடியானவையாகவும் 2.37சதவீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாகவும் காணப்படுகின்றன.

திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் 555,432பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 429,960பேரே வாக்களிப்பில் பங்கேற்றிருந்ததோடு 125,472பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. அளிக்கப்பட்ட வாக்குகளில் 423,397வாக்குகளே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 6,563வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

திகாமடுல்ல மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையில் 77.41சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தோடு அவற்றில் 98.47சதவீதமான வாக்குகள் செல்லுபடியானவையாகவும் 1.53சதவீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாகவும் காணப்படுகின்றன.

இதேவேளை, 2024ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 593,187பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தபோதும் 358,079பேரே வாக்கெடுப்பில் பங்கெடுத்திருந்தனர். 235,108வாக்காளர்கள் வாக்கெடுப்பில் பங்கெடுத்திருக்கவில்லை.

அத்துடன் அளிக்கப்பட்ட வாக்குகளில் 325,312வாக்குகளே செல்லுபடியானவையாக இருந்ததோடு, 32,767வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக உள்ளன.

யாழ்;.தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையில் 60.37சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதோடு 90.85சதவீதமான வாக்குகள் செல்லுபடியானவையாகவும் 9.15சதவீதமான வாக்குகள் செல்லுபடியற்றவையாக காணப்பட்டன.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 306,081பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்த நிலையில், 211,140பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருந்தனர். அந்தவகையில் 94,941பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்பதோடு அளிக்கப்பட்ட வாக்குகளில் 195,886வாக்குகள் செல்லுபடியாகியிருந்தன. 15,254வாக்குகள் செல்லுபடியாகியிருக்கவில்லை.

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையில் 68.98சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்ததோடு அவற்றில் 92.78சதவீதமான வாக்குகள் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. 7.22 சதவீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக இருக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 449,686பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 327,524பேரே வாக்களிப்பில் பங்கேற்றிருந்ததோடு 122,162பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. அளிக்கப்பட்ட வாக்குகளில் 318,648வாக்குகளே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 8,876வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையில் 72.83சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தோடு அவற்றில் 97.297சதவீதமான வாக்குகள் செல்லுபடியானவையாகவும் 5.07சதவீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாகவும் காணப்படுகின்றன.

திருகோணமலை மாவட்டத்தில் 315,925பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 218,425பேரே வாக்களிப்பில் பங்கேற்றிருந்ததோடு 97,500பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. அளிக்கப்பட்ட வாக்குகளில் 204,888வாக்குகளே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 13,537வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையில் 69.14சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தோடு அவற்றில் 93.80சதவீதமான வாக்குகள் செல்லுபடியானவையாகவும் 6.20சதவீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாகவும் காணப்படுகின்றன.

திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் 555,432பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 380,523பேரே வாக்களிப்பில் பங்கேற்றிருந்ததோடு 174,909பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கவில்லை. அளிக்கப்பட்ட வாக்குகளில் 362,924வாக்குகளே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 17,599வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

திகாமடுல்ல மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையில் 68.51சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தோடு அவற்றில் 95.38சதவீதமான வாக்குகள் செல்லுபடியானவையாகவும் 4.62சதவீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாகவும் காணப்படுகின்றன.

இதேவேளை கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி  மன்றங்களுக்கான தேர்தலின்போது, யாழ்.மாவட்டத்தில் 498,140பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 281,744பேரே வாக்களிப்பில் பங்கேற்றிருந்ததோடு 216,396பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கவில்லை. அளிக்கப்பட்ட வாக்குகளில் 276,797வாக்குகளே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 4,947வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 102,387பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 61,185பேரே வாக்களிப்பில் பங்கேற்றிருந்ததோடு 41,202பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கவில்லை. அளிக்கப்பட்ட வாக்குகளில் 59,785வாக்குகளே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 1,400வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

மன்னார் மாவட்டத்தில் 91,373பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 67,732பேரே வாக்களிப்பில் பங்கேற்றிருந்ததோடு 23,641பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கவில்லை. அளிக்கப்பட்ட வாக்குகளில் 67,014வாக்குகளே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 718வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 87,800பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 54,098பேரே வாக்களிப்பில் பங்கேற்றிருந்ததோடு 33,702பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கவில்லை. அளிக்கப்பட்ட வாக்குகளில் 53,085வாக்குகளே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 1,013வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

வவுனியா மாவட்டத்தில் 129,293பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 82,512பேரே வாக்களிப்பில் பங்கேற்றிருந்ததோடு 46,781பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கவில்லை. அளிக்கப்பட்ட வாக்குகளில் 80,865வாக்குகளே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 1,647வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 455,520பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 287,739பேரே வாக்களிப்பில் பங்கேற்றிருந்ததோடு 167,781பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கவில்லை. அளிக்கப்பட்ட வாக்குகளில் 284,676வாக்குகளே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 3,063வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

திருகோணமலை மாவட்டத்தில் 319,399பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 218,853பேரே வாக்களிப்பில் பங்கேற்றிருந்ததோடு 100,546பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கவில்லை. அளிக்கப்பட்ட வாக்குகளில் 216,010வாக்குகளே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 2,843வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

அம்பாறை மாவட்டத்தில் 478,669பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 320,160பேரே வாக்களிப்பில் பங்கேற்றிருந்ததோடு 158,539பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கவில்லை. அளிக்கப்பட்ட வாக்குகளில் 316,630வாக்குகளே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 3,530வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலைமையானது, வடக்கு,கிழக்கில் தமிழ்க் கட்சிகள் எழுச்சி பெற்றாலும், பங்கேற்பு ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக அத்தரப்புக்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருப்பதை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.

அதுமட்டுமன்றி, வாக்காளர் கல்வியும் அவசிய தேவையாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஆகவே இந்த விடயத்தில் உரிய தரப்பினர் கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியமானதாகின்றது.