உலகையே பதற வைத்த சம்பவம் ஈரானில் நடந்து முடித்திருக்கிறது. ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத்தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் உள்ள வீடொன்றில் வைத்து துல்லியமான ஏவுகமைாத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலை இஸ்ரேவின் உளவுப்பிரிவான மொசாட்டே நிகழ்த்தி உள்ளது என பரவலாக சந்தேடுக்கப்படுகின்றது. ஏனெனில் இப்படியான துணிகரமான, துல்லியத் தாக்குதல்கள மொசாட்டின் அடையாளமாக இருந்திருக்கின்றன.
இஸ் மாயில் ஹனியேலின் கொலையால், ஹமாஸு டனான பகையை மட்டுமல்லாமல் ஈரானின் பகையையும் இன்னும் கொழுந்துவிட்டெரியச் செய்யும் காரியத்தையே இஸ்ரேல் செய்திருக்கிறது.
உலகிலேயே எங்கும் சென்று எதையும் செய்யும் ஆற்றலுள்ள மொசாட்டின் மூக்கை உடைத்தவர்கள் தான் ஹமாஸ் போராளிகள். 2023 ஒக்ரோபர் 7ஆம் திகதி மொசாட்டின் கோட்டையான இஸ்ரேலுக்குள்ளேயே கிளைடர் விமானங்கள் மூலம் சொல்லியடித்ததில், பெரும் இழப்பை இஸ்ரேல் சந்தித்தது .
ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கொன்றதுடன், நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை ஹமாஸ் சிறைபிடிக்கவும் செய்தது. மொசாட் அமைப்பின் பெரும் புள்ளிகளும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டது தான் மொசாட்டுக்கு ஏற்பட்ட உச்சபட்ச தலை குனிவு. பகிரங்கமாக இப்படி மொசாட்டின் முகத்தில் ஹமாஸ் காறி உமிழ்ந்ததை அவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வில்லை.
இஸ்ரேல் பேயாட்டம் ஆடத் தொடங்கியது ஹமாஸ் அமைப்பையே பூண்டோடு அழிக்க விரக்கமற்ற போர் கட்டவிழ்த்து விடப்பட்டு, காஸா நகரமே சுடுகாடு ஆக்கப்பட்டு விட்டது. 30 ஆயிரத்துக்கும் அதிகமான பலஸ்தீன் மக்களின் குருதியைக் குடித்த பின்னும், மொசாட்டினால் தனக்கு நேர்ந்த அவமானத்தை மறக்க முடியவில்லை. அதனால், தன் பழிதீர்க்கும் படலத்தை காஸாவை விட்டு வெளிநாடுகளிலும் இப்போது மொசாட் விஸ்தரிக்க நினைத்தது. அந்தப் பழிதீர்க்கும் படலத்தின் முதல் பலியே, ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே.
பலஸ்தீனத்தின் பிரதமராக இருந்ததோடு, ஹமாஸ் அமைப்பின் சார்பில் சர்வதேச ரீதியான முன்னெடுப்புகளுக்கு இஸ்மாயில் ஹனியே பொறுப்பாக இருந்தார்.
கட்டார் டோகாவில் இருந்து தன்னுடைய அரசியல் செயற்பாடுகளை அவர் தீவிரமாக முன்னெடுத்தார். அவரின் முயற்சியால் தான் பலஸ்தீனத்தை சுதந்திர நாடாக பல்வேறு நாடுகள் அங்கீகரித்து மிருந்தன.
எனவே ஹமானின் முகமாக, அடையாளமாக விளங்கிய இஸ்மாயில் ஹனியை மொசாட் குறிவைத்தது. ஆனால் அவரை கட்டாரில் கொல்வது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. எனவே தான் ஈரானில் அவரைக் கொல்வதென முடிவெடுக்கப்பட்டது. இதன்மூலம் தன்னுடைய ஜென்மப் பகையாளியான ஈரானையும், நிரந்தர வைரியான ஹமாஸையும் ஒரேயடியாக பழிதீர்க்கலாமென மொசாட் எண்ணியது.
அதற்கான தருணமும் வாய்த்தது அல்லது மொசாட்டால் உருவாக்கப்பட்டது. ஈரானின் அதிபராக இருந்த இப்ராஹிம் ரை ஹெளி விபத்தில் கொல்லப்பட்டதையடுத்து நடந்த தேர்தலில் புதிய ஜனாதிபதியாக தெரிவானார் மசூத் பொஷ்கியான் அவரது பதவியேற்பு விழா நேற்று முன்தினம் ஈரானில் நடைபெற்றது. இந்தப் பதவியேற்பில் கலந்துகொள்வதற்காகத்தான் கட்டாரை விட்டுப் புறப்பட்டார் ஹமாஸ் இயக்க அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே.
கட்டாரில் இருந்து எப்போது அவர் அகன்றாரோ அத்தோடு அவரின் பாதுகாப்பும் பலவினமானது அவருக்குத் தெரியாமலேயே மொசாட் நிழலாக இஸ்மாயில் ஹனியை தொடர்ந்தது. ஈரானிய உளவுப்பிரியின் கவனம் முழுதும் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பில் இருந்தமை மொசாட்டுக்கு வாய்ப்பாகிப் போனது.
ஈரானின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பூரண நம்பிக்கை கொண்டதால், இஸ்மாயில் ஹனியே தனது தனிப்பட்ட பாதுகாப்புக் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. இதுவும் மொசாட்டுக்குச் சாதகமானது. துள்ளியமான ஏவுகணை மூலம் இஸ்மாயில் ஹனியேவின் கதையைக் கண்ணீமைக்கும் நேரத்தில் முடித்துவிட்டது மொசாட் .
இது ஹமாஸுக்கு மட்டுமல்ல, ஈரானுக்கும் பெரிய அடி. ஈரானின் புதிய அதிபர் பதவியேற்ற சிலமணி நேரங்களிலேயே ஹமாஸின் முதுகெலும்பை ஈரானில் வைத்து, இஸ்மாயில் ஹனியேயின் உயிர்ப்பவியோடு உடைத்திருக்கிறது.
மொசாட் இந்தப் பலியெடுக்கும் படலத்தில் இப்போதைக்கு மொசாட் வென்றிருந்தாலும், ஏக்காலத்தில் ஹமாஸினினதும், ஈரானினதும் வெறியை அதியுச்சமாக தூண்டியிருக்கிறது. இதனால் விவையை இஸ்ரேல் கொடுக்க நேரிடலாம். ‘இஸ்மாயில் ஹனியேயின் குருதி வீணாகிப் போகாது’ என்று ஈரான் இனிமேல் இஸ்ரேலுக்குள் இந்தப் படுகொலைக்கான
குளுரைத்திருப்பதன் மூலம், இஸ்ரேலைச் சுற்றிபோர் மேகங்கள் மிக அடர்த்தியாக கருக்கொண்டு விட்டதையே கட்டியம் கூறுகின்றது.
மத்திய கிழக்கில் போர் மூண்டால் அது உலக பொருளாதாரத்துக்கும் பெரும் தாக்கமாக அமையும். இலங்கையும் பாதிக்கும். அதனால்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்கூட்டியே குழுக்களை அமைத்துள்ளார்.