‘நல்லிணக்கம்’ – தமிழ் எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று பேச்சு! விக்கி புறக்கணிப்பு!!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
" இலங்கையில் நிலையான நல்லிணக்கம் - சமத்தும் - சமாதானம் மலர வேண்டும் எனில் இது சிங்கள, பௌத்த நாடு என்ற நிலை மாற வேண்டும். இந்த விடயமே பெரும் பிரச்சினையாக உள்ளது." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
நாட்டில் தலைவிரித்தாடும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி - அவற்றை முற்றாக தடுப்பதற்கு பொலிஸாருக்கு ஆறுமாத கால கெடுவை வழங்கியுள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்.
இலங்கையில் மன நோயாளிகள் மிகக் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மன நோயாளிகளும் அளிக்கும்படும் சிகிச்சையில் சில நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் இல்லாமை ‘சித்திரவத்தைக்கு ஒப்பாகும்’ என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான மொட்டு - யானை கூட்டரசு நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தை மீண்டும் உறுதிப்படுத்தி, 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக்கொண்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்த தருவாயில், இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் கதி என்னவென்பதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி வன்னியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பினால், சர்வதேச மனித உரிமைகள் தினம் துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
" இலங்கையில் மூவின மக்களுடனான பேச்சு மூலம் தீர்வு கிடைத்தால் - அரசமைப்பில் மாற்றம் ஏற்பட்டால் அது மாபெரும் வெற்றி யாகும்.” - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
" போர் இல்லாத சூழ்நிலையிலும் கொழும்பில் தமிழர்களை இலக்கு வைத்து மீண்டும் பொலிஸ் பதிவு இடம்பெறுகின்றது. இலங்கை பொலிஸ் இராஜ்ஜியமா? கிராம அதிகாரிகளின் செயலை எதற்காக பொலிஸார் செய்ய வேண்டும்? இந்த பதிவு நடவடிக்கை உடன் நிறுத்தப்பட வேண்டும்."
இலங்கையின் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நாடு முழுவதும் நேற்று மின் விநியோகம் தடைப்பட்டது. இதனால் பல மணித்தியாலங்கள் நாடு இருளில் மூழ்கியது. போக்குவரத்து உள்ளிட்ட பல அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டன. மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
நிலைமாறுகால நீதி மற்றும் யுத்தத்திற்குப் பின்னரான நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாக, உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவ அரசு தீர்மானித்துள்ளது.