You are currently viewing பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பாராளுமன்றம் ஊடாக பதவி நீக்கம்

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பாராளுமன்றம் ஊடாக பதவி நீக்கம்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 7 ஆம் பிரிவின்படி தற்போதைய தலைவர் மற்றும் உறுப்பினர் ஜே.டபிள்யு.எம்.ஜே.பி.கே. ரட்நாயக்கவை அந்த உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கான பிரேரணைமீதான விவாதம், வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. 

இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை குறித்த பிரேரணை தொடர்பான விவாதம் இடம்பெற்றதுடன், இது தொடர்பான வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 123  வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் பதிவாகின.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி உள்ளிட்ட அரச பங்காளிக்கட்சிகள் ஆதரவாக வாக்களித்தன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகள் எதிர்த்து வாக்களித்தன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், குமார வெல்கம, பௌசி ஆகியோர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.