இலங்கையருக்கு தற்காலிக தடை விதித்த சிங்கப்பூர்

இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சிங்கப்பூர் அந்நாட்டிற்குள் நுழைய பயணத் தடை விதித்துள்ளது.

ஏப்ரல் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருவதாக சிங்கப்பூர் கொவிட் தடுப்பு விசேட பணியகம் அறிவித்துள்ளது.

அத்துடன், சிங்கப்பூர் விமான நிலையத்தை திசை மாற்று வழித்தடமாக (transit) பயன்படுத்துவதற்கும் முன் அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த நாடுகளுக்குப் பயணித்துள்ள சிங்கப்பூர் பிரஜைகள் மீண்டும் நாடு திரும்புவதற்கு அனுமதியளிக்கப்படும் என்று சிங்கப்பூர் கல்வி அமைச்சர் லோரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.

இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் அண்மைக்காலமாக பதிவாகியுள்ள கொவிட் தொற்றுக்களின் அதிகரிப்பைக் கருத்திற் கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரஜைகள் சிங்கப்பூருக்குப் பயணிப்பதற்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் நிலை மோசமாகியுள்ளதால் அதனைச் சூழவுள்ள நாடுகளில் இருந்து பயணிப்போருக்கான பயணக் கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply