ஈஸ்டர் தாக்குதல் நடந்த முதல் சில நாட்களில் கத்தோலிக்க பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் செயற்பட்ட விதமே இந்த நாட்டில் பாரிய இரத்தக்களரியைத் தடுத்து நிறுத்தியது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் தாக்குதல்களின் முன்னரும் சில வாரங்களின் பின்னரும் அவர் செயற்பட்ட விதம் தொடர்பாக குறிப்பாக அவரது அரசியல் தெரிவுகள் தொடர்பாக நாட்டிலே கத்தோலிக்கர்கள் உள்ளடங்கலாக பலருக்கும் கேள்விகள் எழுந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கையில் நாடளாவிய ரீதியில் கத்தோலிக்க தேவாலயங்களில் நேற்று (07) கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்பட்டது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைதியான முறையில் கத்தோலிக்க தேவாலயங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்றன. ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்ட வலியுறுத்தி, கொழும்பு பேராயர்…