“இன ஐக்கியத்திலேயே தேசிய பாதுகாப்பு தங்கியுள்ளது”
வடக்கிலும், தெற்கிலும் இனவாதத்துக்கு எதிரான அரசியலே தற்போது தேவைப்படுகின்றது. இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திலேயே தேசிய பாதுகாப்பு தங்கியுள்ளது. அதனை ஏற்படுத்தும் வகையிலுயே எமது அரசியல் பயணம் அமைந்துள்ளது." - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.