You are currently viewing “தொல்பொருள் விவகாரத்தை இனவாதம் நோக்கி நகர்த்த வேண்டாம்”

“தொல்பொருள் விவகாரத்தை இனவாதம் நோக்கி நகர்த்த வேண்டாம்”

“வடக்கு, கிழக்கு மற்றும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் தொல்பொருள் விவகாரத்தை அரசியல் நலன்களுக்காக,  இனவாத மோதல்களை நோக்கி நகர்த்துகின்றனர். இந்த மோதல்கள் தீவிரமடையுமாயின் 30 ஆண்டுகால போரை விட பாரதூரமான அழிவுகளை மக்களும் நாடும் எதிர்கொள்ள நேரிடும். எனவே, சட்டத்தின் பிரகாரமே செயற்பாடுகள் இடம்பெற வேண்டும்.”

இவ்வாறு புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.  

தமிழ் வார இதழொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

” நாட்டில் தொல்பொருள் கட்டளை சட்டம் காணப்படுகின்றது. அது தொடர்பான முழுமையான அறிவைப்பெற்று அதன் பின்னரே தொல்பொருளியல் பற்றி பேச வேண்டும்.

தொல்பொருள் என்பது இந்து, பௌத்தம் அல்லது முஸ்லிம் என குறிப்பிட்டவொரு மதப்பிரிவினருக்கு மாத்திரம் உரித்துடையதல்ல. தொல்பொருளியல் என்பது முழு நாட்டுக்கு மாத்திரமின்றி , முழு உலகத்துக்கும் உரித்துடையதாகும். 

உதாரணமாக புராதன இந்து கோவிலொன்று கண்டு பிடிக்கப்பட்டால் அதனை அகற்றுமாறு நாம் கூறப்போவதில்லை. மாறாக அது குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு , அதனை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.”  -எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.