You are currently viewing அலி சப்ரி ரஹீமை பதவி விலகுமாறுகோரி பாராளுமன்றத்துக்கு பிரேரணை

அலி சப்ரி ரஹீமை பதவி விலகுமாறுகோரி பாராளுமன்றத்துக்கு பிரேரணை

முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு கோரிக்கை விடுத்து பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற, நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டத்தின்போம் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேற்படி கூட்டத்தின்போது கட்சி தலைவர்களாலேயே இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து சுயமாக விலகுமாறு இதன் ஊடாக அலி சப்ரி ரஹீமிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. 

இது தொடர்பில் சபாநாயகரிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.

 3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 91 கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த போது, சுங்கத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு, அபராதம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்ட   அலி சப்ரி ரஹீமிற்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபாநாயகரிடம் கோரிக்கை கடிதமொன்றை முன்வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply