You are currently viewing ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?

ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?

2024 என்பது தேர்தல் வருடம் என தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதலில் எந்த தேர்தல் நடைபெறும் என்பது கேள்விக்குறியாக இருந்து வருகின்றது.

இலங்கையின் அரசமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் 18 இற்கும் ஒக்டோபர் 18 இற்கும் இடைப்பட்ட காலத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்.

தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிகாலம் 2025 இலேயே முடிவடைகின்றது. எனினும், நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து முதற்தடவையாக நாடாளுமன்றம்கூடி இரண்டரை வருடங்கள் கடந்த பின்னர் அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அதற்கான அதிகாரமும் ஜனாதிபதியின் கைகளுக்குள் உள்ளது. அவர் நினைத்த நேரத்தில் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம்.

எனவேதான் எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்ற கேள்வி எழுகின்றது. அதேபோல ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான சூழ்ச்சியும் நடக்கின்றது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. இதன்ஓர் அங்கமாகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான ஏற்பாடு பற்றி பேசப்படுகின்றது. அதற்கான பொறுப்பு முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம். எனவே, இதற்கான முயற்சியில் ஜனாதிபதி இறங்கமாட்டார் என கருதுபவர்களும் இருக்கின்றனர். ஏனெனில் எதிரணிகள் தேர்தலை கோருவருவதால் இதற்கான ஆதரவு வழங்கப்படாது என்பதே அவர்களின் கருத்தாகும். ஆனால் அரசியலில் குள்ளநரியாகக் கருதப்படும் ஜனாதிபதி ஏதேனும் செய்யக்கூடும் என்ற அச்சமும் உள்ளது.

இந்நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் பற்றி சில அரசியல் பிரமுகர்கள் வெளியிட்ட கருத்துகள் வருமாறு,

மைத்திரிபால சிறிசேன

“இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா, ஜனாதிபதிப் பதவியை இல்லாமல் செய்வதற்கான மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு நடை பெறுமா அல்லது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுமா என நிச்சயமா கத் தெரிவிக்க முடியாமல் இருக்கின்றது. என்ன செய்வதென ஜனாதி பதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தெரியாமல் இருக்கும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

“நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் இடம்பெறும் என ஜனாதிபதி மற்றும் அரச தரப்பினர் ஆரம்பத்திலி ருந்து தெரிவித்து வருகின்றனர். தற்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகக் கட்சிக ளுக்கிடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அதேபோன்று கூட்டணி அமைத்துக்கொண்டு ஜனாதி பதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒரு வரைக் களமிறக்குவது தொடர்பாகவும் கட்சிகளுக்கிடையில் பேசப்பட்டு வருகின் றன. ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க ஜனாதிபதிப் பதவியை இரத்துச் செய்வதற்காக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சட்டத்தர ணிகள் குழுவொன்றை நியமித்து, அரச மைப்பில் திருத்தம் மேற்கொண்டு, ஜனாதி பதிப் பதவியை இல்லாமல் செய்வ தற்குத் தற்போது வேகமாகச் செயற்பட்டு வருகின்றார்.

இது தொடர்பாக தற்போது நாட்டுக்குள் பாரியளவில் பேசப்பட்டு வருகின்றது. அதனால் இவ்வாறான நிலையில், இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடை பெறுமா, ஜனாதிபதிப் பதவியை இல்லா மல் செய்வதற்கான மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு நடைபெறுமா அல்லது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுமா என நிச்சயமாகத் தெரிவிக்க முடியாமல் இருக்கின்றது.

அதனால் தற்போ துள்ள நிலைமையில் என்ன நடக்கப் போகின்றது என எங்களுக்கு மாத்திர மல்ல, என்ன செய்வதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தெரியா மல் இருக்கும். ஆனால், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லா மல் செய்வதற்கு மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்குச் சென்றால் அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினராகிய நாம் இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரவளிப்போம்.” – எனவும் மைத்திரி கூறினார்.

உதய கம்மன்பில

“செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்ற உறுதியான நம்பிக்கையில் நாட்டு மக்கள் உள்ளனர். எனவே, ஜனாதிபதி தேர்தலை ஒத்திவக்க முற்பட்டால் நாடு இரத்த களரியாகும்” – என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அரசமைப்பின் பிரகாரம் செப்டம்பர் 18 இற்கும், ஒக்டோபர் 18 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனை ஒத்திவைப்பதற்கான சிறு முயற்சியைக்கூட அரசு எடுக்காது என்றே நம்புகின்றேன். ஏனெனில் அதற்கான முயற்சி இடம்பெற்றால் நாடு இரத்த களரி ஏற்படும்.

கடன் சுமை, வாழ்க்கை சுமை அதிகரிப்பால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்கள் வீதிக்கு இறங்கவில்லை. ஏனெனில் செப்டம்பர், ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருப்பதால் வாக்கால் செய்ய வேண்டிய வேலையை பொல்லுகளால், கத்திகளால் செய்ய தேவையில்லை என மக்கள் நினைக்கின்றனர். அதனால்தான் நாடு அமைதியாக உள்ளது.

நிதி இல்லை என்பதால் தேர்தலை பிற்போட முடியாது, அவ்வாறு நடத்தால் மக்கள் வீதிக்கு இறங்கி வன்முறையில் மக்கள் ஈடுபடுவார்கள் என்பது அரசுக்கு தெரியும்.” என்றார்.

சஜித் பிரேமதாச

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் நிலைப்பாட்டிலேயே ஐக்கிய மக்கள் சக்தி உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார். எனினும், இவ்வருடம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் அதன்பின்னர் பொதுத்தேர்தல் என்பன நடந்த பின்னரே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது பற்றி நாட்டில் தற்போது கதை அடிபடுகின்றது. இவ்வருடம் ஜனாதிபதி தேர்தலொன்று நடைபெறவுள்ள நிலையிலேயே சில சிவில் அமைப்பு பிரதிநிதிகளை வைத்துக்கொண்டு இதற்கான முயற்சி எடுக்கப்படுகின்றது. தற்போதைய ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 134 வாக்குகளைப் பெற்றார். அப்போது அவர் இதனை கூறி இருந்தால் எஞ்சிய 16 வாக்குகளை நாம் வழங்கி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி இருக்கலாம்.

ஆனால் நாட்டு மக்கள் தற்போது ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலை எதிர்பார்த்துள்ளனர். மக்களின் அந்த வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இவ்விரு தேர்தல்களும் நடந்து முடிந்த பின்னர் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.” – என்றார்.