You are currently viewing புலம்பெயர் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை

புலம்பெயர் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை

புலம்பெயர் அமைப்புகள்மீதான தடையை நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வெளிவிவகாரக் கொள்கையின்போது இந்தியாவுக்கு இலங்கை முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே செல்வம் எம்.பி. இவ்வாறு கூறினார்.

” இந்திய, இலங்கை மீனவர்களின் பிரச்சினை நீடித்துவருகின்றது. இந்திய மீனவர்களின் ரோலர் படகுகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இதனை தடுத்து நிறுத்துவதில் வெளிவிவகார அமைச்சும் தமது கடமையை நிறைவேற்ற வேண்டும். இதற்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டால் அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும்.

சீன கப்பல்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்தியாதான் எமது அயல்நாடு. நெருக்கடிகளின்போது முதலில் கை கொடுத்த நாடு. எனவே, அந்நாட்டுடனான உறவு முக்கியம். அதன் பாதுகாப்பும் மிக அவசியம். எனவே, வீண் சர்ச்சைகளில் சிக்கும் செயலை தவிர்த்துக்கொண்டால் நல்லது.

வெளிநாட்டில் உள்ள அமைப்புகள்மீது தடை விதிக்கப்பட்டுள்ளன. எனவே, உரிய வகையில் ஆராய்ந்து தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ” – எனவும் செல்வம் எம்.பி. குறிப்பிட்டார்.