You are currently viewing பாதீட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!

பாதீட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!

அனைத்து அரச ஊழியர்களுக்கும் வரவு – செலவுத் திட்டம் ஊடாக சம்பள உயர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சரவைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், தனியார்துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்குமாறும் பாதீடு ஊடாக யோசனை முன்வைக்கப்படவுள்ளது எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் பாதீடு ஊடாக சம்பள உயர்வு வழங்குமாறு வலியுறுத்தி அரச ஊழியர்கள் நாடு தழுவிய ரீதியில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 20 ஆயிரம் ரூபாவரை அதிகரிப்பு வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையை இருந்தது.

“பாதீடு ஊடாக அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது என்பதை அறிந்தே ஜேவிபி உள்ளிட்ட தரப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இது தமது அழுத்தத்தால்தான் கிடைத்தது என்ற விம்பத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.” – எனவும் அமைச்சரவையில் ஜனாதிபதி விசனம் வெளியிட்டுள்ளார்.

நாட்டில் பொருட்களின் விலைகள் எகிறியுள்ளன. அத்தியாவசிய சேவைகளின் கட்டணமும் அதிகரித்துள்ளது. எனவே, தனியார் துறையினருக்கு சம்பள உயர்வு குறித்து கோரிக்கை விடுப்பதைவிட, தொழில் வழங்குனர்களுக்கு ஏதேனும் கண்டிப்பான உத்தரவை பிறப்பிப்தே மேலானது.