You are currently viewing சர்வதேச விசாரணை குறித்த நிலைப்பாட்டை மாற்றினார் மைத்திரி!

சர்வதேச விசாரணை குறித்த நிலைப்பாட்டை மாற்றினார் மைத்திரி!

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால், நாளை போர் தொடர்பில் தமிழ் டயஸ்போராக்கள் சர்வதேச விசாரணை கோரலாம். எனவே, சர்வதேச விசாரணை அவசியமில்லை.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கடந்த சில நாட்களாக பகிரங்கமாக கருத்து வெளியிட்டுவந்த நிலையிலேயே மைத்திரி நேற்று திடீரென மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (22) உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிட பிரதிநிதியை இன்று (நேற்று) காலை சந்தித்தேன். கடிதமொன்றை கையளித்தேன். சர்வதேச விசாரணையொன்று அவசியமில்லை என சுட்டிக்காட்டினோம். ஏனெனில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்தபோய், நாளை புலிகள், தமிழ் டயஸ்போராக்கள் போர் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரக்கூடும். இது எமது நாட்டின் இறைமை மற்றும் சுயாதீனத்தன்மைக்கு பிரச்சினையாக அமையும். எனவே, நாட்டை நேசிப்பவர் என்ற அடிப்படையிலேயே மேற்படி கடிதத்தை கையளித்தேன்.

அதேபோல உள்ளக விசாரணைக்கு சர்வதேசத்திடம் இருந்து தொழில்நுட்ப உதவி பெறவேண்டும். சிறந்த தொழில்நுட்ப வளம் எம்மிடம் இல்லை.” – என்றார்.