” பொலிஸ் அதிகாரம்தவிர அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக இருக்கின்றார்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்திய பிரதமருடன் ஜனாதிபதி பேச்சு நடத்தினார். 13 ஐ அமுல்படுத்தும் விடயத்தில் அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றார். 13 ஆவது திருத்தச்சட்டம் எமது அரசமைப்பில் உள்ள அங்கம், அதில் உள்ள பொலிஸார் அதிகாரம் தொடர்பில் சர்ச்சை உள்ளது. அதைதவிர ஏனைய விடயங்களை அமுல்படுத்த ஜனாதிபதி உறுதியாக உள்ளார்.
இந்திய பிரதமரிடமும் இது கூறப்பட்டது. கொழும்பில் 13 இல்லை எனக்கூறிவிட்டு இந்தியா சென்று 13 பிளஸ் என கூறும் நபர் எமது ஜனாதிபதி கிடையாது. அவர் முடியுமான விடயங்களை செய்கின்றார். மக்கள் பக்கம் நின்று முடிவுகளை எடுக்கின்றார்.
வடக்கு அபிவிருத்தி தொடர்பிலும் அவரிடம் விசேட திட்டம் உள்ளது.” – எனவும் ரங்கே பண்டார கூறினார்.
அதேவேளை, அதிகாரப்பகிர்வுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே ஐக்கிய தேசியக்கட்சி உள்ளது.