You are currently viewing ’13’ இல் இருந்து ஒத்திசைவு பட்டியல் நீக்கப்படுமா?

’13’ இல் இருந்து ஒத்திசைவு பட்டியல் நீக்கப்படுமா?

”  மாகாணசபை முறையிலுள்ள ஒத்திசைவு பட்டியலை நீக்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது. அதற்கு இடமளித்தால் ஒற்றையாட்சியை பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

உத்தர லங்கா சபாகயவின் விசேட கூட்டமொன்று  நடைபெற்றது. இதன்போது அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச,
 
” அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது மட்டுமல்ல அதற்கு அப்பால் அதிகாரங்களை பகிர்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. ஒத்திசைவு பட்டியலை நீக்குவதற்கான நடவடிக்கையும் இடம்பெறுகின்றது. ஒத்திசைவு பட்டியல் உள்ளது.

13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்நாட்டில் இருந்த எழு ஜனாதிபதிகள் நடவடிக்கை நடவடிக்கைவில்லை. இனியும் அதற்கு இடமளிக்ககூடாது. மாகாணத்துக்கு இறைமையை பகிரவே இங்கு முயற்சி இடம்பெறுகின்றது. ஒத்திசைவு பட்டியல் நீக்கப்பட்டு, முழுமையாக அதிகாரங்களை பகிர்ந்தால் ஒற்றையாட்சியை காக்க முடியாது.” – எனவும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, ஒத்திசைவு பட்டியலை நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்தார்.

ஒற்றையாட்சிக்குள் தீர்வு

” ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அதிகாரங்களை பகிர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

காலியில் நேற்று (16) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மகா சங்கத்தினர் முன்னிலையில் சஜித் இவ்வாறு கூறினார்.

” அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான எமது நிலைப்பாடு ஒருபோதும் மாறாது. ஒற்றையாட்சிக்குள், 13 ஐ அடிப்படையாககொண்டு அதிகாரப்பகிர்வு இடம்பெறும். மக்களின் இறைமை பாதுகாக்கப்படும்.

அரசமைப்பில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை காக்கப்படும் என்பதுடன், ஏனைய மதங்களுக்குரிய உரிமைகளும் பாதுகாக்கப்படும்.

அனைத்து இலங்கையர்களுக்கும் சம உரிமை இருக்க வேண்டும், கௌரவமாக வாழக்கூடிய சூழ்நிலை இருக்க வேண்டும். நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியம் இருந்தால்தான் தேசிய பாதுகாப்பு பலமாக இருக்கும்.” – எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.