You are currently viewing முஸ்லிம்களின் விரும்பமின்றி வடக்க, கிழக்கு இணைப்பு சாத்தியமாகாது – ஹக்கீம்

முஸ்லிம்களின் விரும்பமின்றி வடக்க, கிழக்கு இணைப்பு சாத்தியமாகாது – ஹக்கீம்

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தாமல் இருந்திருந்தால் மலையக மக்கள் இன்று பலமானவர்களாக இருந்திருப்பார்கள் – என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சூரியன் வானொலியில் நேற்று ஒலிபரப்பான ‘விழுதுகள்’ அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” மலையக மக்களுக்கு என்றாவது ஒரு நாள் பிரஜை உரிமை கிடைக்கப்பெற்றிருக்கும். பிரேமதாச – தொண்டமான் காலத்தில் அது சாத்தியமானது முக்கிய மைல்கல்லாகும். இதனால் அரசியல், தொழிற்சங்க பலத்தை மக்கள் பெற்றார்கள். பல விடயங்களை வென்றெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சிறிமா – சாஸ்திரி ஒப்பநதத்தின் பிரகாரம் பலர் இந்தியாவுக்கு அனுப்பட்டதால் மலையக மக்கள் சனத்தொகை வீழ்ச்சியடைந்தது. அவ்வாறு நடைபெறாமல் இருந்திருந்தால் மலையக சமூகம் இன்று இரட்டிப்பாக இருந்திருக்கும். சிறுபான்மை சமூகத்துக்கு அது மேலும் பலமாக இருந்திருக்கும்.” – எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு இணைவு

வடக்கு, கிழக்கு இணைவு என்பது தமிழர்களின் அபிலாஷையாக உள்ளது. அதனால் அது பற்றி நான் பொதுவெளியில் பேசுவதில்லை. இதனை செய்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிருந்து பெரும்பான்மை பலம் அவசியம். அந்த சாத்தியப்பாடு இருக்குமாக இருந்தால்தான் அது பற்றி பேச வேண்டும்.

முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு முயற்சிக்கமாட்டோம் என அண்ணன் சம்பந்தனே கூறியுள்ளார். அதற்கான தருணம் வந்தால் அவர்கள் எம்முடன் பேசுவார்கள். இது விடயத்தல் தென்னிலங்கை சூழ்நிலை குறித்தும் ஆராய வேண்டும்.

13 ஆவது திருத்தச்சட்டம் அமுலுக்குவந்தபோது ஆறில் ஐந்து பெரும்பான்மைபலம் அன்றைய அரசுக்கு இருந்தது. தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த நிலையில் இல்லை. நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் பிரிந்துள்ளது. ” எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

Leave a Reply