அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
நாளை மறுதினம் புதன்கிழமையே அவரின் உரை இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இவ்விடயம் உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது குறிப்பிட்டார்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சர்வக்கட்சி மாநாட்டை ஜனாதிபதி நடத்தியிருந்தார். கட்சிகளின் யோசனைகளை முன்வைப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே 13 இன் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஜனாதிபதி உரையாற்றவுள்ளார் என தெரியவருகின்றது.
பொலிஸ் அதிகாரம்தவிர ஏனைய அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்கும் நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார்.
அதேவேளை 13 ஐ முழுமையாக அமுலாக்குமாறு இந்தியாவும் வலியுறுத்திவருகின்றது.