நாடும் – தேசமும் – உலகமும் அவளே

110ஆவது சர்வதேச மகளீர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நாடும் தேசமும் உலகமும் அவளே என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டு மகளீர் தினம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மார்ச் 8ம் திகதி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாப்பட்டு வருகிறது. பெண்கள் என்பவர்கள் ஆண்டின் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டியவர்கள். இவ்வுலகிற்கு, மனித சமுதாயத்திற்கும் பெரும் பங்காற்றியதில் பெண்களின் பங்கு பெருமளவு உண்டு. குறைந்தபட்சம் இந்த மார்ச் 8ம் திகதியாவது மறவாது அவர்களது பங்களிப்பை போற்றி கொண்டாடுவோம்.

” அன்பு நிறைந்த பெண்ணோடு காதல் கொள்வது ஒரு ஆணை மீண்டும் மனிதனாக்குகிறது

சர்வதேச மகளிர் தினம் 2021. உங்கள் வாழ்க்கையை உன்னதமாக்கும் பெண்களோடு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மகளிர் தின வாழ்த்துக்கள்:
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. உங்கள் சகோதரி, அம்மா, மனைவி , காதலி மற்றும் தோழிகளோடு பகிர்ந்து கொள்ள சில வாழ்த்து செய்திகள் இதோ.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாள் பெண்களின் சமூக, பொருளாதார , கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகள் கொண்டாடப்படும் நாளாகும். மேலும் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தும் நாளாகவும் அமைந்துள்ளது.

ஆனால், இவ்வருடம் சற்று வித்தியாசமானது. காரணம் கோவிட்-19. இவ்வருட மகளிர் தினத்தின் முக்கியமான மையப்பொருள்.

தலைமைத்துவத்தில் பெண்கள்: கோவிட்-19 உலகில் ஒரு சமமான எதிர் காலத்தை சாதிப்பது.

2021-ன் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட உங்கள் வாழ்க்கையின் உன்னதமான பெண்களோடு நீங்கள் பகிர்ந்து கொள்ளவேண்டிய வாழ்த்து செய்திகள் சில..

சகோதரிகளுக்கான வாழ்த்து செய்திகள்:

மகிழ்வான எந்த தருணமும், எந்த குடும்பமும், எந்த மனமும், எந்த உணர்வுகளும் நீங்களின்றி முழுமையடைய முடியாது. உங்களால் மட்டுமே இவ்வுலகை முழுமையடைய செய்ய முடியும்.
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரி.

என் வாழ்வில் நீங்கள் எவ்வளவு அற்புதமான பெண் என்பதை, என் கண்களின் வழியாக பார்க்க முடிந்தால் அறிந்து கொள்வீர்கள். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் தங்கையே.

நீங்கள் எனக்கு செய்த எல்லா உதவிகளுக்கும் என் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரி.

ஆண்டுகள் பலவும், பல இனிமையான மற்றும் கசப்பான நேரங்களை உங்களோடு பகிர்ந்துள்ளேன். எல்லா நிலையிலும் எனக்கு உறுதுணையாக இருந்து சிறந்த ஆறுதலாக நீங்கள் இருந்துள்ளீர்கள். எனவே, நான் சொல்ல நினைப்பதெல்லாம் உங்களை என்னுடைய மனதிற்கு நெருக்கமானவராக கருதுகிறேன். இந்த மகளிர் தினத்தில் நான் நினைப்பதெல்லாம், உங்களுக்கு எது சிறந்ததோ அத்தனையும் நீங்கள் பெற வேண்டும் என்பதே அது. இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

என்னை விட சிறிய வயதாக இருந்தாலும், எப்போதும் உங்கள் இலக்கை நோக்கிய அர்ப்பணிப்பு மற்றும் கவனம் என்னை ஈர்க்க தவறியதே இல்லை. இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

தோழிக்கான மகளிர் தின வாழ்த்து செய்திகள்

என்னை விட்டு ஒருவரும் இல்லாது போனபோதும், என் கையை பிடித்து என்னை ஆற்றுப்படுத்தவும், சிறந்த பலமாக இருக்கவும் நீங்கள் எப்போதும் இருந்துள்ளீர்கள். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

ஒரு பெண் தோழியோடு இருந்தால் , அங்கே ஒரு தாய்,ஒரு சகோதரி, ஒரு சிறந்த நம்பிக்கைக்குரியவர் என ஒருங்கே அவரில் காணலாம். அப்படியான சிறப்புவாய்ந்த தோழியே உங்களுக்கு இனிமையான பெண்கள் தின வாழ்த்துக்கள்.

நீங்கள் தான் வலிமை, நீங்கள்தான் உந்துசக்தி, நீங்கள்தான் பேராற்றல், நீங்கள்தான் வழிகாட்டி. ஆம் பெண்ணே நீங்கள் தான் என் தோழி. உங்களுக்கு என் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

நட்பு என்பது ஒரு அழகான உறவு மற்றும் அதிலும் ஒரு பெண்ணின் நட்பு என்பது சிறந்த வரம். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

இந்த அற்புதமான பெண்கள் தினத்தில் என் அன்பான வாழ்த்துக்களை உங்களுக்கு அனுப்புகிறேன். உங்கள் வாழ்க்கையில் எல்லா வளமும், வெற்றியும் பெற்று நல்வாழ்வு பெற வாழ்த்துக்கள்.

மனைவிக்கான மகளிர் தின வாழ்த்து செய்திகள்

நீங்கள் செய்யும் சிறிய உதவியும் கூட என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு என் மனமார்ந்த சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்.

உங்களை திருமணம் செய்து கொண்டதற்காக மிகவும் ஆசீர்வதிக்கப் பட்டவனாக உணருகிறேன். காரணம் நீங்கள் என் வாழ்வில் நிலையான அமைதி மற்றும் சந்தோஷத்தை பரிசளித்துள்ளீர்கள். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

இந்த சர்வதேச மகளிர் தினத்தில் நான் உங்களிடம் சொல்ல விரும்புவது, நான் உங்களை காதலிப்பதை காட்டிலும் உங்களுக்கு மரியாதை செய்கிறேன். காரணம் என் வாழ்விலும் , என்னுள்ளும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

ஒரு பெண்ணின் வாழ்க்கையானது சவால்கள் நிறைந்தது. இருப்பினும் நீங்கள் அவற்றையெல்லாம் கருணையோடும், கண்ணியத்தோடும் எதிர்கொண்டு இன்று முழுமையான பெண்ணாக திகழ்கிறீர்கள். என் அன்பான மனைவியே மகளிர் தின வாழ்த்துக்கள்.

நீங்கள் என் வாழ்வில் வந்த நாள், என்னுடைய வாழ்வை அழகானதாய் மாற்றியது. இந்த உலகின் அத்தனை இன்பமும் , சந்தோஷமும் உங்களுக்கு கிடைக்க நான் வாழ்த்துகிறேன். காரணம் எப்போதும் நீங்கள் சிறப்புக்குரியவர். என் துணைவியே உங்களுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

காதலிக்கான மகளிர் தின வாழ்த்து செய்திகள் :

என்னைக்காட்டிலும் உங்களின் வாழ்க்கை மற்றும் இலட்சியத்தைக் குறித்து நீங்கள் தீவிரமாக இருப்பதை கண்டு எனக்கு பெருமையாக இருக்கிறது. உங்களை பெற்றதால் நான் பெரும் பாக்கியவானாக கருதுகிறேன். உங்களுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள்.

எப்போதும் என்னை உந்தித் தள்ளும் ஒரு நபர் நீங்கள். காரணம் எதையும் நீங்கள் எளிதில் விட்டுக் கொடுப்பதில்லை மற்றும் சரியானதன் பக்கம் நிற்கிறீர்கள். என் அன்பு நிறைந்த காதலியே உங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்.

உங்களை நேசிப்பதை காட்டிலும், நான் உங்களை மதிக்கிறேன். காரணம் பொறுமை, அர்ப்பணிப்பு, காதல், பொறுப்பு ஆகியவற்றின் சிகரமாய் நீங்கள் இருக்கிறீர்கள். எப்போதும் உங்களை காதலிக்கிறேன். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

இந்த மகளிர் தினத்தில் நான் உங்களிடம் சொல்ல வேண்டியது, நீங்கள் என் வாழ்வில் சிறப்புக்குரியவர் மற்றும் உங்களை என் வாழ்வில் பெற்றிருப்பதில் பெருமகிழ்வு அடைகிறேன்.

நான் சிறந்த மனிதனாக இருப்பதற்கு நீங்கள் தான் காரணம். என் மீதான உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு நன்றி. இந்த மகளிர் தினத்தில் உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.

சக பெண் ஊழியர்களுக்கான மகளிர் தின வாழ்த்துக்கள்.

எல்லா நாளும் ஒரு சவால் , எல்லா நாளும் ஒரு வாய்ப்பு. நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். உங்களுக்கு என் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

எப்பொழுதெல்லாம் எங்கள் அணியில் நீங்கள் இடம் பெறுகிறீர்களோ அப்போதெல்லாம் நாங்கள் அறிவோம் அந்த வேலையை மிக நேர்த்தியாக முடித்துவிடுவோம் என்று. காரணம் நீங்கள் ஒரு வசீகரமான நேர்த்தியாளர். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

எந்த சூழலிலும் கடுமையாக மட்டும் விட்டுக் கொடுக்காமல் உழைப்பது எப்போதும் வெற்றியை பரிசளிக்கும். அத்தகைய உழைக்கும் பெண்களுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

நீங்கள் ஒரு சிறந்த தலைவர் மட்டும் அற்புதமான சக பணியாளர். உங்களோடு பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். உங்களுக்கென் அன்பான மகளிர் தின வாழ்த்துக்கள்.

நிர்வாகத் திறன்களை ஒரு பெண்ணிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால், அவருடைய வாழ்க்கை, வேலை, விருப்பங்கள், ஆசைகள் ஆகிய அனைத்திலும் அவர்கள் எப்போதும் சமநிலையை கடைபிடிக்கிறார்கள். அவர்களுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

தாய்க்கான மகளிர் தின வாழ்த்து செய்திகள்

ஒரு உறுதியான பாறை போல என்னோடு எப்போதும் நீங்கள் நிற்கிறீர்கள். ஒரு நல்ல ஆதரவாளராக, என்னை எப்போதும் உந்தித் தள்ளுகிறீர்கள். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா.

நீங்கள் கடவுளின் மிகத் தனித்துவமான படைப்பு. நீங்களின்றி என்னால் உயிர்த்திருக்க முடியாது. என்னை உந்தித் தள்ளி ஆதரவளித்ததற்கு நன்றி. இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

அன்புள்ள அன்னையே நான் வேண்டிய போதெல்லாம் நீங்கள் அங்கு இருந்துள்ளீர்கள். எப்போதும் என்னை வழிநடத்தி சரியான பாதையை காட்டுகிறீர்கள். என் அன்பான இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

அன்பான தாயே நீங்கள்தான் எனக்கு உத்வேகமூட்டி. என்னால் முடிந்த அளவு சிறந்தவற்றை செய்ய என்னை எப்போதும் உந்துகிறீர்கள். என்னுடைய உறுதியான ஆதரவாக இருப்பதற்கு மிக்க நன்றி. இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

அழகான பெண், சிறந்த தோழி மற்றும் அற்புதமான தாய். இவையாவும் மற்றும் இதற்கு மேலும் நீங்கள் எனக்கு. உங்களைப் போன்ற அன்னையை பெற்றதற்கு பெருமையாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் உணருகிறேன். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா.

Leave a Reply