சனாதிபதி உட்பட அரசாங்கம் ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறை காட்டியிருந்தாலும், ஒக்டோபர் மாதம் பொருட்களின் ஏற்றுமதி வருவாயில் சரிவைக் காட்டியுள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி வருவாய் 977.3 மில்லியன் டொலர்கள் ($ 977.3) ஆக உள்ளதோடு, இது 2020 ஒக்டோபர் மாதத்தில் 831.72 மில்லியன் டொலர் வரை குறைந்திருந்தது.
இலங்கையின் வர்த்தக ஏற்றுமதி வருவாயை மாதாந்தம் 1,000 மில்லியன் டொலர் அளவு பேணிச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.
அடுத்த வாரத்தில் –
கோவிட் 19 நெருக்கடிக்கு அரசினால் வழங்கப்பட்டுள்ள தூண்டுதல் தொகுப்புகளைப் பற்றி கலந்துரையாடுவோம்.
-சேன சூரியப்பெரும-
-பொருளாதார ஆய்வாளர்.-
