IMG-LOGO
Home செய்திகள் எம்மைவிட யாரும் கவலைப்பட முடியாது : இலங்கை அரசாங்கம்

எம்மைவிட யாரும் கவலைப்பட முடியாது : இலங்கை அரசாங்கம்

by Haren - Date : 2021-Apr-02
IMG
எம்மைவிட யாரும் கவலைப்பட முடியாது : இலங்கை அரசாங்கம்

இலங்கையை விடவும், இலங்கை மக்களைவிடவும் உள்நாட்டு மனித உரிமைகள் குறித்து கவலைப்பட வேறு யாரும் இருக்க முடியாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவை முன்னெடுக்கவுள்ள விசாரணை குறித்து DW சர்வதேச செய்திச் சேவையின் செய்தியாளர், இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜுடன் வீடியோ மூலம் நடத்திய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து DW செய்திச் சேவை வெளியிட்டுள்ள செய்தியின் சுருக்கம்  :

இலங்கையின் உள்நாட்டுப் போர் 12 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. ஆனால் போர் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணங்கள் இன்னும் நீடிக்கின்றன. அதே நேரத்தில் புதிய பிளவுகள் அரசியல்வாதிகளால் ஏற்படுத்தப்படுகின்றன. COVID-19 தொற்றுநோய் நெருக்கடியை கையாளும் போது இவை மேலும் மோசமடைந்துள்ளன. இந்த நிலையில் தான் இலங்கை மனித உரிமைகளைப் பாதுகாக்குமா என்ற கேள்விகள் தொடர்கின்றன.

இலங்கையில் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான ஒரு செயல்முறையை ஆரம்பிக்கப் போவதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கடந்த வாரம் தீர்மானித்தது.

“கடந்த ஆண்டில் பதிவான சம்பவங்கள், இலங்கையில் மனித உரிமைகள் மோசமடைந்து வரும் சூழ்நிலையைத் தெளிவாக எச்சரிக்கும் அடையாளங்களைப் பிரதிபலிக்கின்றன” என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவை தெரிவித்திருந்த நிலையில், இதற்கான ஆதாரங்களை சேகரிப்பதற்கான ஆணையையும் பெற்றுக்கொண்டது.

ஐ.நா. மனித உரிமைப் பேரவை முன்னெடுக்கவுள்ள விசாரணை குறித்து DW சர்வதேச செய்திச் சேவையின் செய்தியாளர், இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜுடன் பேசியுள்ளார்.

ஊடகவியலாளரின் கேள்விகளுக்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சின் செயலாளர், தனது நாட்டின் அரசாங்கம் இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்: அத்துடன், இலங்கை மக்களையும், இலங்கையையும் விட வேறு யாரும் இலங்கையின் மனித உரிமைகளில் ஆர்வம் காட்டவில்லை.” என்றும் குறிப்பிட்டார்.

12 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின் 25 ஆண்டுகால உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. இதிலிருந்து இலங்கையில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், செய்ய வேண்டிய பணிகள் இன்னும் இருக்கின்றன என்று கொலம்பேஜ் தெரிவித்தார்.

“எங்களின் ஒரு தலைமுறை முழுமையாக ஒரு போரை சந்தித்துள்ளது. இதன்பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுப் போரின் பாதிப்புக்கள் நெடுதூரம் தொடர்கிறது

இலங்கையில் தமிழ் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர் 2009 இல் முடிவுக்கு வந்தது. எனினும், தமிழ், சிங்கள மக்களுக்கு இடையில் நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் போரின் போது நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஆராயவும் பல ஆணைக்குழு அமைக்கப்பட்டன.

இந்த மோதலில் இருபுறமும் கொடூரமான அட்டூழியங்கள் நடந்தன, பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் காணவில்லை என்ற பதிவுகள் உள்ளன. சில போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டு வழக்குகள் முன்னோக்கி நகர்ந்துள்ளன. ஆனால் அரசியல்வாதிகள் பிளவுகளைத் தூண்டவும், விசாரணைகளை நடத்துபவர்களைத் தண்டிக்கவும் முயற்படுகின்றனர்.

குழந்தைகள் உட்பட பொதுமக்களை படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இராணுவச் சிப்பாயை ஜனாதிபதி, அவருக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மன்னிப்பு வழங்கியுள்ளார். இதுகுறித்து வெளிவிவகார அமைச்சரிடம் கேட்டபோது இதற்கு பதில் கூற மறுத்துவிட்டார் என்று குறித்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
Tags: