IMG-LOGO
Home செய்திகள் ஜெனீவாவில் வாக்கெடுப்பு பிற்போடப்பட்டது

ஜெனீவாவில் வாக்கெடுப்பு பிற்போடப்பட்டது

by Haren - Date : 2021-Mar-22
IMG

இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று நடத்தப்படவிருந்த நிலையில், அது நாளை செவ்வாய்க்கிழமை வரை பிற்போடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாராறு காரணமாக வாக்கெடுப்பு பிற்போடப்பட்டுள்ளதாக ஜெனீவா செய்திகள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக திங்கட்கிழமை 22ஆம் திகதி இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் இந்த வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடப்பதையும், மனித உரிமைகள் பேணப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேரமன உள்ளிட்ட நாடுகள் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளன.

இதுதொடர்பாக நாடுங்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்திய பின்னர் இன்று தேர்தல் நடத்தப்படவுள்ளது.

அத்துடன், இலங்கை சார்பாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, வாக்கெடுப்புக்கு பதிலளிக்கும் வகையில் 
அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முன்வைப்பார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று வெளிவிவகார அமைச்சர் ஏற்கனவே கூறியிருந்தார்.

ஒரு நாட்டின் உள் விவகாரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது அல்லது அந்த விடயங்களில் வாக்கெடுப்பு நடததுவது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை அல்ல என்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்ப்பித்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் 44 ஐரோப்பிய நாடுகளில் சுமார் 40 நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த 40 நாடுகளில் 12 நாடுகளுக்கு இந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கும் உரிமை உள்ளது.

இலங்கைக்க எதிரான தீர்மானத்தையும், அதன் உள்ளடக்கங்களையும் இலங்கை ஏற்கனவே நிராகரித்துள்ளது. இருப்பினும், இலங்கைக்கு சீனா, பாகிஸ்தான், ரஸ்யா, கியூபா, பிலிப்பைன்ஸ், வெனிசுலா ஆகிய நாடுகள் ஆதரவளித்துள்ளன.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் தற்போது 47 நாடுகள் உறுப்புரிமையைக் கொண்டுள்ளது. இந்த மனித உரிமை சர்வதேச அமைப்புக்கு நீண்ட வரலாறு இல்லை. இது 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி நிறுவப்பட்டது. தற்போது 14 ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. எனினும், ஐக்கிய நாடுகள் சபை என்பது 76 ஆண்டு பழமையான சர்வதேச அமைப்பாகும்.

இலங்கையில் போர் முடிவடைந்த பின்னர், இலங்கை ஏராளமான மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களையும், வாக்கெடுப்புக்களையும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் எதிர்கொண்டது. எனினும், இந்த ஏராளமான சந்தர்ப்பங்களில் இலங்கை தோல்வி கண்ட நிலையில், 2014ஆம் ஆண்டு இலங்கைக்கு வெற்றி கடைத்தது.

47 உறுப்பு நாடுகளில் 24 நாடுகள யோசனைக்கு எதிராக வாக்களித்தமையினால் இலங்கைக்கு அப்போது வெற்றிகிடைத்தது.

ஐ, நா. மனித உரிமைப் பேரவை வரலாற்றில் இது மிகமுக்கிய தருணம் என்பதுடன் உலகம் முழுவதும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வரலாற்று நிகழ்வில் உலகின் பலம்வாய்ந்த மற்றும் பொருளாதார பலம்பொருந்திய ஏராளமான மேற்கத்தேய நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்தன.

அத்துடன், பல முன்னணி நாடுகள் இலங்கையை ஆதரித்திருந்தன. இந்தியா, சீனா, ரஸ்யா, ஜப்பான், பாகிஸ்தான், சவூதி அரேபியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மாலைத்தீவு, அல்பீரியா, கொங்கோ குடியரசு, கியூபா, கென்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென்னாபிரிக்கா, கஜகஸ்தான், குவைத், மொரோக்கோ, நமீபியா, வியட்நாம் உள்ளிட்ட 24 நாடுகள இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.

எனினும், ஒரு வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே இலங்கை அந்த நெருக்கடியில் இருந்து வெற்றிகொண்டிருந்தது. இந்தத் தருணத்தில் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் என்பன இலங்கைக்கு எதிரக கடுமையான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், இம்முறை இலங்கைக்கு எதிரான தீர்மானம் மென்மை போக்குடையது என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடததக்கது.
Tags: