IMG-LOGO
Home செய்திகள் 19 වැනි ව්‍යවස්ථා සංශෝධනය ගැන ජනතාවට ඇත්තේ මිශ්‍ර මතයක්
OTI

19 වැනි ව්‍යවස්ථා සංශෝධනය ගැන ජනතාවට ඇත්තේ මිශ්‍ර මතයක්

Date : 2020-Aug-27
IMG

அரசியலமைப்பு யாப்பில் 19 வது சீர்திருத்தம் சம்பந்தமாக பொது மக்கள் கொண்டிருக்கும் கருத்துக்களை தெரிந்து கொள்ளும் நோக்கில்  நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் தெரியவந்திருப்பது 19வது அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக மக்கள் வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பதாகும். 

2015 ம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்து அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் அதிகாரங்கள் சிலதை இல்லாமலாக்கி பாராளுமன்றத்தை வலு பொருந்தியதாக மாற்றுவதாக கூறி ஒரு கண்காட்சியை மேடையேற்றியது. ஐந்து வருடங்களின் பின்னர் அவர்கள் அவ்வாறானதொரு கருத்தை கொண்டிருக்கின்றனர். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்திய 1978ன் இலங்கை அரசியல் யாப்பின் கீழ் வாழுகின்ற நபர்களின் 42 வருட அனுபவம் மூலம் இந்த கருத்துக்களை அறிந்து கொள்ளலாம். 

பொது ஆய்வின் பிரகாரம் மக்கள் பெருவாரியாக 19 யாப்பு சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்வதோ அல்லது மறுக்காமல் இருப்பது புலனாகிறது. அதற்கு மாற்றீடாக அதன் வெ வ்வேறு பட்ட கருத்துக்களை நன்றாக உண்ணிப்பாக அவதானிக்கின்றனர். 19 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் முறை தொடர்பாக அது சம்பந்தமாக நடைமுறைச் சிந்தனைகளை கொண்டிருப்பதை இங்கு மேற்பார்வை செய்ய முடியுமாகவுள்ளது. 

ஜனாதிபதியின் அதிகாரம் தொடர்பில் நோக்கும் போது ஜனாதிபதி பிரதம மந்திரி பதவியை வகிப்பதற்கு சார்பாக இருந்தாலும் கூட ஜனாதிபதி சேவைக் காலம் .இரண்டு முறைகளுக்கு மட்டுப்படுத்தப்படுவது சம்பந்தமாக மக்களக்கு விருப்பம் காணப்பட்டது. அதேபோன்று அவசரகாலம் மேற்கொள்ளல் போன்ற ஓரளவு ஜனாதிபதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உட்படுத்துவதற்கு விருப்பம் தெரிவித்தனர். 

19 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் பிரதான ஓர் அங்கமாக திகழ்வது சுயாதீன ஆணைக் குழுவாகும். எவ்வாறாயினும் அது தொடர்பான பிரச்சினைகளுக்கு பதிலளித்த நபர்கள் அது தொடர்பாக போதிய விருப்பமில்லாமலேயே காணப்பட்டனர். எவ்வாறாயினும் பிரச்சினைகளின் போது அவ்வாறானதொரு அதிருப்தி நிலையை வெளிப்படுத்தி கருத்துக்களை பகிர்ந்ததில்லை. 

அவர்கள் 19 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் சம்பந்தமாக வெ வ்வேறுவிதமான கருத்துக்களை கொண்டிருக்கின்றனர். சில நிறைவேற்று அதிகாரம் பிரதம மந்திரியுடன் பகிர்ந்து கொள்வது பற்றிய கருத்துக்களில் அதிக கவனம் செலுத்தினர். சுயாதீன ஆணைக் குழு தொடர்பாக நம்பிக்கை தகர்க்கப்பட்டிருக்கிறது. 

ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 19 வது சீர்திருத்தம் அரசியல் சமூகத்துக்கிடையில் மீண்டுமொறு உரையாடலை உருவாக்கியிருக்கிறது. அரசியலமைப்பின் 19 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு எதிரானவர்கள் இதனை மாற்ற வேண்டும் என்றும் அது குறைகளை கொண்டதொன்று என கூறுகின்றனர். 

இந்த சீர்திருத்தத்திற்கு சார்பாக நடவடிக்கைகளை கொண்டவர்கள் அங்கு இடம்பெற்ற மறுசீரமைப்பு நடவடிக்கைள் தொடர்பாக சில பாதுகாப்பு நிலமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். 19 வது சீர்திருத்தம் மாற்றம் செய்யப்பட வேண்டும் கூறும் கூட்டம் செல்லுவது என்னவென்றால் நிருவாக முறைகளின் செயல்திறன் மற்றும் பிரயோசத்தை சேர்த்துக் கொள்வதற்காக அல்லது சரியான நிருவாக முறையொன்றை நாட்டிற்குள் கொண்டு வருவது தொடர்பாக அவ்வாறு செய்ய வேண்டும் என்பதாகும். இந்த சீர்திருத்தத்தை அவசர அவசரமாக கொண்டு வருவதற்கும், ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரிக்கு இடையில் ஒருவித கருத்து முரண்பாடு நிலவுவதும், ஒறுமைப்பாடு இன்மை காரணமாக செயற்திரண் மற்றும் பயன்பாடு குறைந்துள்ளதாகவும் எதிர் கருத்துக்களை கொண்டவர்களின் அபிப்பிராயமாகும். 

இந்த மறுசீரமைப்பு சம்பந்தமாக அரசியல் பிரமுகர்களுக்கு மத்தியில் இவ்வாறான வேறுபாட்டுடன் கூடிய கருத்து நிலவினாலும் சிவில் சமூகத்தினதும் மக்களினதும் கருத்துக்கள் என்ன என்பது தொடார்பாக இதுவரை தெளிவில்லாமல்  இருக்கிறது. 19 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் சம்பந்தமாக மக்கள் கொண்டிருப்பது எப்படிப்பட்ட கருத்து என்பதை தெரிந்து கொள்ளும் நோக்கில் மக்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ளும் ஆய்வு ஆரம்பிக்கப்பட்டது. 

இது சம்பந்தமாக அதாவது 19 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் சம்பந்தமாக கட்டமைப்பு பொருந்திய கேள்விப் பத்திரமொன்று வெளியிடப்பட்டதோடு எதிர்பாராத வகையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெளிவு பெறப்பட்ட 200 பேர்கள் மற்றும் நேரடியாக மாவட்ட மட்டத்தில் சிங்கள மற்றும் தமிழ் மொழி  ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாக கருத்துக் கூறிய 200 பேர் அடங்கலாக மொத்தம் 400 பேர்கள் அவர்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

அரசியலமைப்பு யாப்பின் 19 வது சீர்திருத்தத்துக்கு ஏதுவான பிரதான காரணிகள் மற்றும் குறைகளைக் கொண்டுள்ளதோடு சுயாதீனமாக கருத்துக்களை வழங்குவதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கருத்துக்களை பதிவேற்றிக் கொள்வதற்கு பயன்படுத்தப்பட்டது பல்தேர்வு பதில் முறையாகும். 

எவ்வாறாயினும் 19 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக மக்களது சிந்தனை அதிகளவில் பரந்த அளவு

தெளிவை பெற்றுக் கொள்வது சம்பந்தமாக எதிர்காலத்தில் ஆய்வென்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதாகும்.

 

 

 

 

Tags: