IMG-LOGO
Home செய்திகள் இலங்கை ஒரு மதச்சார்பற்ற நாடாக திகழ வேண்டுமா?
OTI

இலங்கை ஒரு மதச்சார்பற்ற நாடாக திகழ வேண்டுமா?

Date : 2020-Aug-25
IMG

பிறமதச் சார்பின்மை, மதச்சார்பின்மை, எனும் இரண்டு வசனங்களுக்கு இடையில் நாம் தெரிவு செய்ய வேண்டியது எந்தக் கருத்தை என்பது சம்பந்தமாக உரையாடலொன்றை உருவாக்கும் நோக்குடன் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சுமித் சாமிந்த அவர்களின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் One Test Initiative நிறுவனத்திÇடாக நடாத்தப்பட்டது  One Test Initiative நிறுவனம் இலங்கையில் அரசியல் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டுடன் கொள்கையளவில் ஒன்றுபட்ட உயர்வுக்காக அனேக கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்த சட்டத்தரணி ஷிரால் லக்திலக அவர்கள் பிறமதச் சார்பின்மை மற்றும் மதச்சார்பின்மை இவ்வாறானதொரு உரையாடல் நடைபெறுவதன் முக்கியத்துவம் மற்றும் அதன் நோக்கம் சம்பந்தமாகவும் முதலில் தெளிவு படுத்தினார்.

அதன் பின்னர் பேராசிரியர் சுமித் சாமிந்த அவர்கள் உரையாடலுக்குள் நுழைந்து இந்தியாவின் தற்போதைய நிலை மற்றும் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் போது மகாத்மா காந்தியின் ஒரே தேசம் எனும் தொனிப் பொருளை தெளிவுபடுத்தி உரை நிகழ்த்தியது இலங்கையின் அனகாரிக தர்மபால அவர்களின் தேசியம் மற்றும் மத அடிப்படையை அமைத்து செயல்பட்ட முறையை ஒப்பீட்டுக் காட்டுதலோடாகும். அதன் பின்னர் எகிப்து, பாகிஸ்தான், துருக்கி, பிரான்ஸ், அமெரிக்கா, ஜேர்மன், வங்காளதேசம் போன்ற நாடுகளில் நடைபெற்றுச் சென்ற முறைமையையும் தேசியத்துவம், பாஷை வேறுபாடு, பிறமதச் சார்பின்மை, மதச்சார்பின்மை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு விளக்கமளித்தார்.

40, 50 மற்றும் 60 களில் காலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்ற நாடுகள் மற்றும் மதச்சார்பின்மைக்கு கொதித்தெழுந்தாலும் அது வரை மதச்சார்பின்மையில் அவர்கள் தூரமாக காணப்படுவதாகும். இதனால் இந்தியா சிறந்த உதாரணம் என சுட்டிக் காட்டினார்.

இங்கு முக்கியமாக கருதப்படுவது மதச்சார்பற்ற அரசாங்கம் ஒன்று அவசியமா என்பதாகும். அரசாங்க மற்றும் மதங்களுக்கிடையில் வித்தியாசம் போன்று தனி நபர்களுக்கிடையில் சத்தியம் மற்றும் நம்பிக்கைகளுக்கிடையில் உள்ள வேறுபாட்டை பிரித்தறிந்து கொள்வது எவ்வாறு என்பது இங்கு மிக முக்கியமானதாகும். சத்தியம் இருப்பதானது இந்த யுகத்தின் ஒப்பீட்டளவு விடயமாகும். தொழில்நுட்ப யுகத்தில் ஒப்பீட்டளவில்லாத உண்மை என்ற ஒன்று இல்லாத நிலையில் மீண்டும் பிறமதச் சார்பு பற்றிய கருத்து தத்துவ ரீதியாக கலந்துரையாடப்பட வேண்டியதாகும். என்றாலும் வெறுமனே நம்பிக்கை மட்டுமா என்பதனைப் பற்றியும் கலந்துரையாடப்பட வேண்டும்.

 

இலங்கை தொடர்ந்தும் முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்ற பிரச்சினை யாதெனில், பாதுகாப்பு சம்பந்தமான சாத்தியமான கற்பித்தலாகும். அங்கு நாட்டின் சகல தரப்பினதும் பாதுகாப்பு தொடர்பான சாத்தியம் அல்ல. அரச அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்ளவதற்கான உயர் வர்க்கத்தின் சாத்தியமே. இந்த நெருக்கடி தர்மபால அவர்களின் காலத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட்ட இந்த உயர் பதவி வகிப்பவர்களின் தேசிய வாத வாதம் இலங்கையின் அடுத்த இன, சாதியை அகற்றும் திட்டத்தின் பின்னாலிருப்பது ஒரு புறத்தில் அரச அதிபதி அதிகாரம் சம்பந்தமான திட்டமாகும்.

இலங்கையில் 1956ன் பின்னர் இலங்கை அரச அதிகாரம் சம்பந்தமாக பெறுவாறியான மாற்றம் நடைபெறவில்லை என்பதனை கூற வேண்டும். 1977 வரை சீரமைக்கப்படாத கொள்கையில் இந்தியாவும் மற்றும் சமீபமாக இருந்த இலங்கையும் வலுவற்ற அரசாகும். உள்நாட்டு பயமுறுத்தல் மற்றும் வெளிநாட்டு தலையீடுட்டுக்கு மத்தியில் 1977ன் பின்னர் இலங்கை வலுப்பெறவில்லை. இதனூடாக இலங்கையின் அதிகாரத்தை ஒன்றினைப்பதற்காக தந்திரமாக திகழ்ந்தது பிறமதச் சார்பின்மையோ அல்லது மதச் சார்பின்மையோ அல்ல. மாறாக சிறுபான்மையை வேறாக்கி பெரும்பான்மையின் பாதுகாப்பை உறுதி செய்வதிலாகும். அதனால் தேசியவாதம் மற்றும் அதிகாரத்துக்கு இடையில் பாரிய தொடர்பு உண்டு என்பதை இங்கு இறுதியாக கூற வேண்டும்.

 

சிரேஷ்ட ஆய்வாளர் ஹரேந்திர திஸாநாயக்க அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தார்

தேரவாத பௌத்த நாடு எனும் வகையில் இலங்கையில் நிலை சற்று உற்று நோக்கினால், முதலாவதாக சொல்ல வேண்டியது உலகிலுள்ள எந்தவொரு தேரவாத பௌத்த நாடும் மதத்தின் அடிப்படையில் அரசாங்கத்தை அமைத்துக் கொண்டதில்லை. நாங்கள் இயற்கையாகவே அரசு மற்றும் மதத்தை ஒன்றோடொன்று கட்டி வைப்பதற்கு முயற்சிப்பது வெளிப்படுகிறது. தாய்லாந்து, மியன்மார் மற்றும் இலங்கையின் நிலைமைகளை உற்று நோக்கின், அது நன்றாக புலப்படுகின்றது. இந்த எந்தவொறு நாடும் அந்த இரண்டு நிறுவனங்களையும் வேறாக்க முயற்சிக்கவோ அல்லது முயற்சிப்பதுமில்லை. இலங்கையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாட்டை காக்கும் விஷ்னு தேவரின் நிறத்தை கட்சிக்கு எடுத்துக் கொண்டு தீவிர மதவாத அரசியலின் இலட்சனத்தை உருவாக்கினார்கள். விஷேடமாக, அவர்கள் பதவியை கைப்பற்றிய சந்தர்ப்பங்களில் செய்து வைத்திருந்த பாடசாலைகளை மதத்திற்கு மாற்றிக் கொண்டு அரசாட்சிக்கு பௌத்த மத்தினரை கொண்டு வந்து பௌத்த அரசொன்றை உருவாக்குவதற்கு முயற்சித்தார்கள் என்று சொன்னால் மிகச் சரியானதாகும். மதச்சார்பின்மை ஐக்கிய தேசியக் கட்சியில் ஓரளவு காணக்கூடியதாக இருந்தாலும் மதத்தால் அரசை வேறுபடுத்துவது எனும் கருத்தை நோக்கின் இலங்கை தோல்வியுற்றுள்ளது. அதே போன்று உலகில் எந்தவொறு தேரவாத பௌத்த நாடும் இதனை செய்யவில்லை என்பதனை தெரிவிக்க வேண்டும். இலங்கையின் புறத்தில் பார்க்கையில் இது தற்போது பௌத்த நாடு அல்ல. பௌத்த - சிங்கள நாடு என்று சொல்ல முடியும். எமது பிரதான அடையாளம் சிங்களம், இரண்டாவது அடையாளம் பௌத்தம், நாம் இப்போது அடையாளத்தை மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறோம். இப்போது பொது வாழ்க்கையை ஏற்பாடு செய்வது மதத்தினால் ஆகும். ஜனாதிபதி சத்தியப் பிரமாணம் மேற்கொள்வதை நோக்கின், அது நன்றாக புலப்படும். அதனூடாக மதச்சார்பின்மையை நாம் கட்டியெழுப்புவதா அல்லது பாதாளத்திற்கு இழுத்துச் செல்வது என்பது திடமாகும். ஆதனை கட்டியெழுப்புவதற்கு நாம் தேசியம் பற்றி உள்ள செய்திகளை மாற்ற வேண்டும்.

இலங்கையில் அதிகாரத்தின் இயற்போக்கு அன்று தொடக்கம் இன்று வரை சமமானதாக தோன்றுகிறது. பிரபு வர்க்கத்தினர்க்குள் அதிக போட்டி மனப்பான்மை நிலவுகின்றது. இன்று இந்தியாவின் பாரதிய மக்கள் கட்சியை முன்மாதிரியாகக் கொண்டு இந் நாட்டு முன்னணி உருவாக்கம் பெற்றிருப்பது புலப்படுகின்ற கருத்தாகும். அதனடிப்படையில் இன்று காந்தியின் முன்மாதிரியை புறந்தள்ளி பாரதிய மக்கள் கட்சியின் சுயபோக்கை தேசம் சம்பந்தமாக இலங்கை பின்பற்றி வருகிறது.

எவ்வாறாயினும் இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு எந்த இடத்திலிருந்தோ தெரிவு செய்யப்பட்ட மாதிரிகள் இலங்கைக்கு கொண்டுவரப்படுவது சம்பந்தமாக கேள்விக் குறியே காணப்படுகிறது. இங்கு மிகவும் பெறுமதியாக அமைவது வௌ;வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்டது ஒவ்வொறு காரணம் என்பதை தெரிந்து கொள்வதாகும்.

Tags: