IMG-LOGO
Home செய்திகள் கொவிட் சமூக சூழலில் இலங்கை பொருளாதாரத்தின் திசை எங்கே செல்கிறது?
OTI

கொவிட் சமூக சூழலில் இலங்கை பொருளாதாரத்தின் திசை எங்கே செல்கிறது?

Date : 2020-Aug-25
IMG

  • சவால்களுக்குள் சிக்கியிருந்த இலங்கையின் பொருளாதாரம் கொரோனா தொற்றின் காரணமாக இன்னுமொறு சிக்கலுக்குள் ஆட்கொண்டிருப்பதோடு இது இலங்கையின் பொருளாதாரத்தை நேர்த்தியான திட்டமிடலுடன் மேம்படுத்துவதற்காக கிடைக்கப்பெற்றுள்ள அரிய சந்தர்ப்பம் என்பது அறிஞர்களின் கருத்தாகும்.
  • மே மாதம் 26ம் திகதி கொவிட் சமூக சூழலில் இலங்கையின் பொருளாதாரத்தின்  எந்த திசை எங்கே? எனும் தலைப்பில் நடைபெற்ற விவாத உரையாடலிலேயே இந்த கருத்து முன்வைக்கப்பட்டது.
  • இலங்கை அரசியல் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு மற்றும் கொள்கை ரீதியான ஏகோபித்த கருத்தை ஊக்குவித்தல் தொடர்பாக அதிகமான கட்சிகளின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்ட One Test Initiative  நிறுவனத்தினால் இந்த உரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

கலாநிதி சுமனசிரி லியனகே, கலாநிதி வகீஷா குணசேகர, கலாநிதி அநுர ஏக்கநாயக்க போன்றவர்கள் இந்த உரையாடலில் கலந்து கொண்டதோடு One Test Initiative  நிறுவனத்தின் ஹரேந்திர திஸாநாயக்க உரையாடலை நெறிப்படுத்தினார்.

இலங்கையில் சுகாதார சிக்கல்கள் ஏற்படும் போது நாம் அரசாங்கம் எனும் வகையில் விஷேடமாக முகங்கொடுக்கும் போது, அது இலேசாக பொருளாதார நெருக்கடியாகவும், சவாலாகவும் மாற்றமடைய முடியுமெனும் எம்மிடம் இருக்கின்ற கருத்துக்கள் இங்கு கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பொருளாதார நெருக்கடி மிகவும் இலேசாக அரசியல் நெருக்கடியாக மாற்றம் பெற்றுள்ளது. ஜனநாயக உலகை மேம்படுத்துவது ஆரம்ப காலம் தொட்டே, அதாவது பிரான்ஸ் புரட்சியிலிருந்தே, பொருளாதார புரட்சி ஏற்பட்டு அது அரசியல் சமூக பிரச்சினையாக உருமாற்றம் பெறுவதை நாம் அவதானிப்பதை குறிப்பிட வேண்டும். உலகில் இதற்கு முன்னரும் இது போன்ற பாரிய தொற்று நிலை கண்டிறியப்பட்டிருக்கிறது. அந்த தொற்றின் மூலமாக நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில் சுகாதார சிக்கலானது பொருளாதார மற்றும் பின்னர் அரசியல் சிக்கலாக உருவாக்கம் பெற்று முன்னோக்கிச் செல்வதாகும்.

எனவே, அதனை ஒரு கோணத்திலிருந்து மட்டும் உற்று நோக்குவது போதாமையாகும். அதேபோன்று ஒரு குறுகிய காலத்தை மாத்திரம் கருத்திற் கொண்டு கதைப்பது அவ்வளவு பிரயோசனமானது அல்ல என்பதை நாம் நிச்சயமாக சிந்தனை செய்ய வேண்டியுள்ளது.

தற்போதைய நிலைமையை சுறுக்கமாக உற்று நோக்கும் போது இலங்கையின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலையில் நீண்ட காலமாக இருந்து வருகின்றது என்றால் அது மிகையாகாது. அடுத்த கோணத்தில் அதன் முன்னேற்ற வேகம் மிகவும் மந்த கதியில் இருப்பதாக கூறினால் அது மிகச் சரியாகும். கடந்த ஐந்து வருட காலத்துள் இந் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் ஐந்து சத விகிதமாகவாவது செல்ல முடியாத நிலை இருப்பதோடு சராசரியாக நோக்கும் போது அது மூன்று - நான்கு விகிதத்தில் இருப்பதை அவதானிக்கலாம். இலங்கையில் ஒரு புறத்தில் இவ்வாறான பிரச்சினை நீண்ட காலமாக இருக்கின்றதை இங்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பொருளாதாரத்தில் உள்ள மட்டுப்படுத்தல் நிலைமை காரணமாக அரச வருமானத்தில் பாரிய வீழ்ச்சி நிலவுவதை அவதானிக்க முடிகிறது. அதனால் ஒரு புறத்தில் இறக்குமதி மட்டுப்படுத்தப்படுத்தப்படுவதற்கு விஷேட வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதுடன் அதன் பிரதிபலிப்பு நமக்கு கண்டு கொள்ளக் கூடியதாகவுள்ளது. அதே போன்று அரச கடன் முகாமைத்துவத்தில் நாம் அண்மையில் கண்ட விடயம் யாதெனில் இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமரிடம் டொலர் மிலியன் 1.1 கடன் தொகையை கேட்பதாகும். அது அவசர கடன் தொகையாக பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எமது நாட்டின் பொருளாதார நிலைமை, அவ்வாறில்லாவிட்டால் அரச நிதி நிலைமை போதுமான அளவு சிறந்த நிலையில் இல்லை என்பது நாம் நன்றாக அறிந்த விடயம் என்பதை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.

அதே போன்று உலகளவில் ஏற்படும் உலக விஷேட நிலலைமைகளை கருத்தில் கொண்டால் இந்த ஆண்டில் (2020) உலக பொருளாதாரம் Áற்றுக்கு மூன்று (3%) மேலாண்மை சுருங்கிக் செல்வதை எதிர்பார்ப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் முடிவு எவ்வாறு காணப்படும் என்பதை உறுதியாக கூற முடியாது. என்றாலும், ஒப்பீட்டளவில் இது சம்பந்தமாக ஏதாவது கூற முற்படுவோமானால் 2008 ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் Áற்றுக்கு ஒன்று (1%) வீழ்ச்சி காணப்பட்ட நிலையில் உலகளாவிய ரீதியில் பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் உலக பொருளாதாரம் எவ்வாறான முறையில் முகங்கொடுக்கும்? தொழில்நுட்பத்தை உபயோகித்தல், தொழில்நுட்பத்தை புது வடிவில் பயன்படுத்தக் கூடிய வகையில் இட வாய்ப்புக்களை ஏற்படுத்தல் போன்ற நடவடிக்கைகளுடன் புது நிலைமைகள் உருவாகுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. இந்த வகையில் பரந்த அளவில் உரையாடல் கலந்தாலோசிக்கப்பட்டது.

 

அங்கு கலாநிதி அநுர ஏக்கநாயக்க கருத்து தெரிவிக்கையில்,

கொரோனா தொற்று காரணமாக இலங்கையி;ன பொருளாதாரமும், உலக பொருளாதாரமும் மிகவும் மோசமான அளவுக்கு வீழ்ச்சி பெற்றுள்ளது என்று கூற முடியாதுள்ளது. பொருளாதாரம் நன்றாக இருந்த சந்தர்ப்பங்களில் தொற்று காரணமாக பிரச்சினை ஏற்பட்டதெனில் நாம் காண வேண்டியது ஆங்கில V எழுத்து அமைப்பில் அதனை தீர்ப்பதாகும். தொற்றுடன் பொருளாதாரம் வீழ்ச்சி பெற்று அது மீண்டும் வேகமாக பழைய நிலைமைக்கு கொண்டுவரப்பட வேண்டும். என்றாலும் அவ்வாறானதொரு நிலை இல்லை என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அது ஆங்கில U எழுத்து வடிவில் வளர்ச்சி பெறுவதென்பது அவர்களது நம்பிக்கையாகும். அவ்வாறெனில் பொருளாதாரம் கீழ் நோக்கி தள்ளப்பட்டு நீண்ட காலமாக கீழ் நோக்கிக் காணப்பட்டு அதன் பிறகு அதனை மேலே கொண்டுவருவது முடியுமான காரியமாகும்.

பொருளாதாரம் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கான காரணம் உலக பொருளாதாரத்தில் பாரிய முறுகல் நிலை இந்த காலத்திலேயே உருவாக்கம் பெற்றதாகும். இது தொடர்பாக நாம் அவதானம் செலுத்துவது இன்றியமையாததாகும்.

2018 ல் உலக வர்த்தக அமைப்பு மேற்கொண்ட ஆராய்ச்சிப் படி 1800 ஆண்டு முதல் 1950ம் ஆண்டு வரை உள்ள 150 வருட காலப் பகுதியில் உலக பொருளாதாரம் மிகவும் மிதவாத போக்கிலே காணப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போன்று இரண்டாம் உலப் போரின் பின்னர் உலகம் மீண்டும் உயிர் பெற்றதுடன் 1950ற்குப் பிறகு உலக பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ச்சி பெற்றதாக ஆராய்ச்சியில் தெளிவாக்கப்பட்டுள்ளது. அது 2008 வரை நடைமுறையில் இருந்தது. எனினும், 2009ம் ஆண்டின் பின்னர் உலக பொருளாதாரத்தில் வளர்ச்சி காணப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து உலக பொருளாதாரம் ஒரே இடத்தில் தேக்கம் பெற்றிருப்பதை அவதானிக்க முடிகிறது.

கொரோனா தொற்று காரணமாக இலங்கை உட்பட உலக நாடுகள் பூராகவும் வேலை செய்யும் நிலைமை இல்லாமல் போயுள்ள நிலை காணப்படுகிறது. அதனால் தனி மனித ஊதியம் இல்லாமலாகியுள்ளது. வேலை செய்யாததின் காரணமாக பொருளாதார உற்பத்தி தடைப்பட்டுள்ளது. பொருள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்ய முடியாமலுள்ளது. எதிர்காலத்தில் தொற்று நிலைமை சீரானதும் இந்த நிலைமை முடிவுக்கு வருமா?

வலுவான பொருளாதாரம் உள்ள நாடுகளின் நிலை இலங்கை போன்று பயங்கரமானதான காணப்படாது. இது வரை இலங்கையில் காணப்பட்டது அன்றாட நடவடிக்கைக்காக வருமானத்தை விட செலவு அதிகரித்து காணப்படும் நிலையாகும். அடுத்த கருத்தாக அமைவது கடன் சுமை பாரிய அளவில் காணப்படுவதால் புதிதாக கடன் பெற்றுக் கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளதாகும். அதனால் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.

இது தொடர்பாக வாதிடும் ஒரு சிலரின் அபிப்பிராயம் இலங்கை உலக பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்பை மேற்கொண்டு செல்வதானது ஏதாவது ஒரு காரணத்திற்காக அதிலிருந்து விடபட வேண்டும் என்பதாகும். என்றாலும் அது நடைமுறைச் சாத்தியமா? இலங்கையின் மொத்த உற்பத்தியில் முப்பது (30%)  உலக அடிப்படையோடு தொடர்புபட்டதாகும்.  இதற்கு மேலதிகமாக வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் எமக்கு அனுப்பும் மூலதனம் சராசரியாக நோக்குமிடத்து தேசிய உற்பத்தியோடு ஒப்பிடுகையில் அது எட்டு (8 %)  மட்டுமே. சுற்றுலாத் துறை மூலம் கிடைக்கப் பெறும் வருமானம் தேசிய உற்பத்தியில் Áற்றுக்கு நான்கு (4%)  மாத்திரமே. வருடாந்தம் வெளிநாடுகளிலிருந்து நாம் பெற்றுக் கொள்ளும் கடன் தொகை தேசிய வருமானத்தில் ஐந்து (5%)  ஆகும். இவ்வாறு எமது பொருளாதாரத்தில் ஐம்பது (50%)  அளவில் உலக பொருளாதாரத்தோடு அல்லது நேரடி தொடர்பு கொண்டிருப்பதை கண்டு கொள்ள முடிகிறது.

மேலதிகமாக தொழில்நுட்பம், கல்வி போன்ற துறைகளை நோக்குமிடத்து மேலே குறிப்பிட்ட உலக பொருளாதாரத்திலிருந்து ஒதுங்குவது நடைமுறைச் சாத்தியமாகாது. இவ்வாறான நிலையில் நாம் முன்னேறிச் செல்ல வேண்டியது எவ்வாறு என அவதானத்தை செலுத்த வேண்டியுள்ளது.

இலங்கையில் அதிகமாக இருப்பது எது என்பதை நோக்குமிடத்து முதலில் வருவது தொழிலாளர் வர்க்கமாகும். என்றாலும் எமது நாட்டில் பெண்களில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்பவர்கள் Áற்றுக்கு முப்பது (30மூ)  மட்டுமே. முhணவர்கள் பெரும் அளவில் தொழிலின்றி காணப்படுகின்றனர். இந்த தொழிலாளர்களை நாம் பயன்படுத்த வேண்டும். எமக்கு நிலம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் மழை, சூரிய ஒளி, காற்று வருடந்தோரும் சிறப்பாக இருக்கிறது. அதே போன்று நிலம் போன்று ஏழு மடங்கு அதிகமாக கடல் எமக்கு இருக்கிறது. இந்த வளங்களை பிரயோசனப்படுத்தக் கூடிய முறையில் நாட்டின் பொருளாதாரத்தை தயார் செய்வது முக்கிய காரணியாகும்.

என்றாலும், சிக்கலாக காணப்படுவது என்னவெனில் அதிக சோர்வுக்குப் பின்னராவது சரியான பாதைக்கு செல்லும் இடத்திலாவது நாம் இல்லாமல் இருப்பதாகும். அவ்வாறெனில், முடிவுகளை மேற்கொண்டு சரியான திசையை நோக்கிச் செல்வதாயின் சிறு உற்பத்தி தொடர்பாக மற்றும் அதற்கு முன்வரும் ஆட்களை வலுவாக்கும் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இது வரை இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை கொவிட் - 19 தொற்று சம்பந்தமான பிரச்சினைக்கு அப்பால் சென்றுள்ள ஒன்றாகும். உலக பொருளாதாரம் மற்றும் இலங்கை பொருளாதாரத்துக்கும் இடையில் உள்ள பாரிய முரண்பாடுடன் ஏற்பட்ட அண்மைக்கால பிரச்சினையாக கொவிட் - 19 தொற்று கண்டறியப்படுதலும் மற்றும் அதனை உறுதிப்படுத்தலுமானதாகும். இந்த தொற்றின் பின்னர் இலங்கையின் அல்;லது உலகளாவிய நிலை அல்லது நிராசையுடன் கூடிய சமநிலைக்கு உட்படுத்த முடியுமா என்பது பற்றி சந்தேகமே உள்ளது.

தேசிய மட்டத்தில் எமது நாட்டில் பரவலாக உள்ள வளங்களை பாவனைக்கு உட்படுத்துவதற்காக விதிமுறைகளை கண்டறிவதற்காக அவசரப்பட வேண்டும். அதற்காக செங்கல், சீமெந்து மற்றும் கொங்க்ரீட் அடிப்படையில் வெளிநாட்டு கடனுதவியோடு கட்டியெழுப்பப்படும் வீதிகள் மற்றும் கோபுரங்கள் அல்லது பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய முறைமை இல்லாமையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

கலாநிதி வகீஷh குணசேகர இவ்வாறு தெரிவித்தார்......

கொரோனா தொற்று உலகளாவிய பிரச்சினையாகினும் அது நாட்டின் பொருளாதார சமூக அரசியலின் புது வியூகத்தை ஏற்பாடு செய்து கொள்வதற்கு நமக்கு வழங்கப்பட்டுள்ள அரிய சந்தர்ப்பமாகும். இன்று நாம் முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியானது கொவிட் காரணமாக உருவாகவில்லை என்றாலும் கொவிட் மூலம் பாதாளத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறோம். சீனா கூட அவர்கள் ஏற்கனவே திட்டமிட்ட இலக்கை நோக்கி பயணிப்பதை தவிர்த்து தொழிலின்மை, வறுமை போன்ற பிரிவுகளுக்கு முன்னுரிமை வழங்கி நலன்புரி விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதாக அந் நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். சீனா பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் செல்லும் நாடாக காணப்பட்டாலும் அந்த நிலைமையை தற்போது மாற்றியுள்ளது. ஐரோப்பா தொடர்பாக அவதானத்தை செலுத்தும் போது இவ்வாறானதொரு உரையாடல் உருவாகியிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. கொவிட் தொற்று காரணமாக உலகளாவிய பொருளாதாரம் நேர் எதிராக மாறியுள்ளதாக ஐரோப்பா குறிப்பிடுகிறது. அமெரிக்கா மற்றும் இத்தாலியை சேர்ந்த பொருளாதார நிபுணர் மரியானோ மசுகாடோ உலக வர்த்தக மையத்தின் அமர்வில் உரையாற்றியதற்கு சாட்சி உள்ளது.

கொவிட் தொற்று உலகில் பிரதான இரண்டு கிரியைகளுக்கு நேரடியாக தொடர்புபட்டிருப்தோடு உலக கட்டுப்பாடு (Global Governance) எனும் கருப்பொருள் மற்றும் சர்வதேச இணைப்பு (International Corporation)   எனும் முறைமை இது வரை சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளன. எந்தவொறு தேசிய அரசாயினும் மக்கள் அதற்கு விருப்பமாக இருந்தாலும், விருப்பமற்று இருந்தாலும் எல்லா நாட்டிலும் இந்த தொற்றை அழித்தொழிப்பதற்கு முன்வந்திருப்பது அரசாங்கம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அடுத்த காரணி அதாவது இரண்டாவது கருத்தாக அமைவது அதி –உலகமயமாக்களை சுற்றியுள்ள இந் நாட்டு தேசிய பொருளாதாரமாகும். இரண்டாவது உலகப் போரின் பின்னர் சர்வதேச தொழில்சார்பு தீர்மானம் அடிப்படையில் வினியோகத்தின் சங்கிலித் தொடரில் இலங்கையின் தேசிய பொருளாதாரம் தங்கியுள்ளது. அவ்வாறே அனேக நாடுகளின் நிலைமையும் அது போன்றதே. என்றாலும் அந்த நிலைமை வீழ்ச்சி கண்டு வருவதும் எமக்கு இதுவரை தற்காலிகமாக அல்லது விளங்கக்கூடியதாக உள்ளது எனலாம். அங்கு பிரதானமாக மக்களின் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிப்பது, வியாபார நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றமை, கோரப்பட்ட பொருட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளமை போன்ற காரணங்களினால் இறக்குமதி தொடர்பாக பொருட்கள் உற்பத்தி தற்காலிகமாக அல்லது ரத்து செய்யப்பட்டள்ளன. உலக மட்டத்தில் வர்த்தக சந்தை முறைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதனால் இலட்சக் கணக்கான மக்கள் இன்று தொழிலின்றி கஷ;டப்படுகின்றனர்.

இலங்கையை பொறுத்த மட்டில் ஏற்றுமதிப் பொருட்களை நம்பியுள்ளவர்கள் மற்றும் கடன் மூலம் அதிகடனாளியாக ஓடிக்கொண்டிருக்கின்ற பொருளாதார வியூகமாகும். தொற்றினால் இந் நாட்டிற்கு நேரடியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இந்த கொவிட் - 19 காரணமாக அதிகமாக உணரக்கூடிய விசயம் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகும். இந்த பொருட்களை எமது நாட்டிற்கு இறக்குமதி செய்கின்ற நாடுகளில் கூட தொழிலகங்கள் மூடப்படுகின்ற நிலை காணப்படுவதினால் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வது கூட இன்று நாட்டிற்கு சவாலாக அமைந்துள்ளது. இறக்குமதிப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு எமது நாட்டிற்கு அந்நிய செலாவணி மட்டத்தை சீராக பேணுதல் வேண்டும். எமது அந்நிய செலாவணி மட்டம் மிகக் குறைந்த அளவில் காணப்படுவதினால் இறக்குமதிப் பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்க தற்காலிக அரசு தீர்hமானம் கொண்டுள்ளது.

இந்நாட்டு இறக்குமதி உணவு தொடர்பான கொடுப்பனவு அண்ணளவாக டொலர் மில்லியன் இரண்டு ($ 2 billion) ஆகும். டொலர் மில்லியன் முன்Çறு அளவில் கோதுமை மா, சீனி, கோதுமை, மற்றும் பால் மா இறக்குமதி செய்யப்படுகிறது. 2005 – 2009 வருடம் வரை இலங்கையில் உணவு இறக்குமதி மூன்று மடங்காக உயர்ந்து காணப்படுவதற்கான சான்றுகள் உள்ளன. இங்கு தேசிய விவசாய தொழிலை வலுவாக்குவதென்றால் நடைமுறையில் இருக்கும் பிரச்சினையை ஓரளவாவது அல்லது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது பற்றி அதிக அளவில் அவதானம் செலுத்தப்படல் வேண்டும்.

இலங்கையர்கள் அல்லது உலக மக்கள் எனும் வகையில் நாம் மிகவும் முக்கியமான திருப்புமுனைக்கு வந்திருக்கிறோம். செயன்முறை, நீண்ட கால மற்றும் செயல் சார்பை (Pசழ-யஉவiஎந)  நோக்கி இலங்கையர்களாகிய நாம் உடனடியாக பயணிக்க வேண்டும். இது தொடர்பாக திட்டமிட்ட கொள்கைக்கு நாம் செல்ல வேண்டியுள்ளது. பொருள் இறக்குமதி மற்றும் கடனுடன் வாழும் அதி வாடிக்கைத்தனத்திற்கு உள்ளாகியுள்ள சமூக பொருளாதார முறையிலிருந்து மீள நாம் முதலில் உறுதி பூண வேண்டும். இன்று காணப்படுகின்ற கொவிட் தொற்றை தாண்டி முன்னோக்கி உலகளாவிய வெப்பநிலை, காலநிலை மாற்றம் உலக பேரழிவினால் பாதிப்புக்கு உள்ளாக கூடும் என்பதை மறக்க முடியாது. அதில் நாம் Pசழபசநளளiஎந நுnஎசைழnஅநவெயட ஆழனநட தொடர்பாக கவனிக்க வேண்டியுள்ளது. பூட்டான் போன்ற நாடுகளில் தேசிய திட்டமிடல் மையமாகக் கொண்டிருப்பது இந்த முறையான சூழல் மாசுபடா பொருளாதார வழி வகைகளை உள்ளடக்கியுள்ளது நாம் தெரிந்த விடயம். நாம் அந்த நாடுகளிலிருந்து முன்னுதாரணம் பெற வேண்டும்.

 

கலாநிதி சுமனசிரி லியனகே அவர்கள் தெரிவித்த கருத்து

 

இந்த சவாலுக்கு முகங்கொடுப்பதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? மக்கள் சுகாதார அடிப்படையை வலுவாக்க வேண்டிய ஒன்று என்பது தற்போது சர்வதேசம் ஏற்றுக்  கொண்டுள்ளது. ஸ்பெய்னில் கூட சகல வைத்தியசாலைகளும் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும் என்ற கோசம் எழுந்திருக்கிறது. சமூக ஊடகங்களை பொறுத்த மட்டில், தற்போது சகலரும் கியூபா தொடர்பாக அல்லது குறைந்த அளவில் கியுபாவின் சுகாதார அமைப்புடன் சமனாக வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அதேபோன்று வலுவான அரசாங்கத்தை நிறுவி நாட்டின் இறக்குமதியை கட்டுப்படுத்த மாற்றுத் தொழிலை நோக்கி மீண்டும் செல்ல வேண்டியுள்ளது. கொரோனா தொற்று சாதாரண நிலையை கொண்டதல்ல என்றாலும் அது விஷேடமாக சிக்கலான நிலையில் உள்ளதொன்று என்பதை விளங்க வேண்டும். இலங்கை மத்திய வங்கியின் முன்னால் இணை ஆளுநர் டப்.எம். ஜயவர்தன அவர்கள் குறிப்பிடும் போது இன்று மிகவும் பாதிப்புக்குள்ளான நிலையில் காணப்படும் நிறுவனமாக இலங்கை மத்திய வங்கி காணப்படுவதாக குறிப்பிட்டார். எனவே 1978 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்;ட இறக்குமதி கட்டுப்பாடு அல்லது வேறுவிதமாக வியூக மாற்றம் மேற்கொள்ளும் நிலைக்கு நாம் திரும்ப செல்லாதிருக்க வேண்டும் என்பதாகும். 1978 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கையளவிலான வழிகாட்டலுடன் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். என்றாலும் அதில் நாம் மீண்டும் மீண்டும் கரிசனை செலுத்த வேண்டிய சிக்கல்கள் நிறைய இருக்கின்றன. இதற்காக 1960 – 1977 வரையுள்ள காலப்பகுதியில் சில வழிகாட்டல்களை பெற்றுக் கொள்வது அவசியமாகின்றது. கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை நிவர்த்திப்பதற்காக தழுவலாக கலப்பற்ற முறைமை தேவைப்படுகிறது. கொரோனா தொற்று நகர்ப்புற மாதலால் இந்த நிலைக்கு முகங்கொடுப்பதற்காக இலங்கையில் 350000 கிராமங்களை மையமாகக் கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும்.

எமது பொருளாதாரம் உற்பத்தித் துறைக்கு செலுத்தப்படல் வேண்டும். என்றாலும் நாம் இங்கு ஆரம்பமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விசயம் தேசிய தேவைகளேயன்றி சர்வதேச தேவைகள் அல்ல. நிகழ்கால பொருளாதார நெருக்கடி கொவிட் - 19 தொற்று காரணமாக காரணமாக ஏற்பட்டதொன்று அல்ல. இடதுசாரி முன்னணியினால் முன்வைக்கப்பட்ட கருத்தாக அமைவது, இந்த பொருளாதார நெருக்கடி நீண்ட காலமாக முதலாளித்துவ முறைமையினால் ஆரம்பிக்கப்பட்டதாகும்.

Tags: