IMG-LOGO
Home செய்திகள் 'இழப்பீட்டு பணியகம்' - இதுவரை 1,753 குடும்பங்களுக்கு இழப்பீடு!

'இழப்பீட்டு பணியகம்' - இதுவரை 1,753 குடும்பங்களுக்கு இழப்பீடு!

Date : 2022-Dec-06
IMG
இழப்பீட்டு பணியகம் ஊடாக ஆயிரத்து 753 குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். 

"  காணாமல்போனோர் அலுவலகத்தின் பணிகளை வேகமாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இறுதிப்படுத்தப்பட்ட ஆயிரத்து 653 ஆவணங்கள் இதுவரை எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன், இழப்பீடு தொடர்பான விசாரணைகளின் பிரகாரம் ஆயிரத்து 753  குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 320 ஆவணங்களுக்கு (குடும்பங்களுக்கு) இழப்பீடு வழங்கப்படவுள்ளது.  அதேபோல 5 ஆயிரத்து 246 ஆவணங்கள் எஞ்சியுள்ளன." எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன, இந்தியாவில் இருந்து 11 ஆயிரத்து 780 பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். இவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமாக 9 மாகாணங்களிலும் செயலணி உருவாக்கப்படும். இதன் முதற்கட்டமாக வடக்கில் ஆளுநர் தலைமையில் நிறுவப்பட்டுள்ளது. " - எனவும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

Tags: