IMG-LOGO
Home செய்திகள் 'மாவட்ட சபை வேண்டாம் - சமஷ்டி அடிப்படையிலான தீர்வே வேண்டும்!

'மாவட்ட சபை வேண்டாம் - சமஷ்டி அடிப்படையிலான தீர்வே வேண்டும்!

Date : 2022-Nov-30
IMG
சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டம் குறித்து பேசப்படும் சூழ்நிலையில், மாவட்ட அபிவிருத்தி முறைமை பற்றி ஜனாதிபதி கதைத்திருப்பது அதிர்ச்சியளிக்கின்றது. இது தோல்வி கண்ட முறைமையாகும். எனவே, சமஷ்டி அடிப்படையிலான தீர்வே எமக்கு வேண்டும்."

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் நேற்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
 
" தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கான பேச்சு ஆரம்பிக்கப்படும் எனவும், 13 பிளஸ் பற்றியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்திருந்த அறிவிப்பு அனைத்து தரப்புகளினதும் கவனத்தை ஈர்த்திருந்தது. இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜனாதிபதி கட்சிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார். 13 பிளஸ் பற்றியும் கருத்தாடலை உருவாக்கியிருந்தார்.

இந்நிலையில் எதற்காக திடீரென அவர் மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை பற்றி கதைக்க வேண்டும்? அவரின் அந்த அறிவிப்பு எமக்கு அதிர்ச்சியளிக்கின்றது. மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையானது தோல்விகண்ட முறைமையாகும்.

சமஷ்டி அடிப்படையிலான தீர்வே எங்கள் இலக்கும்.

தமிழ்க் கட்சிகள் இது விடயத்தில் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். தமிழ்க் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லை, அதனால்தான் பேச்சுகளை நடத்துவதில் இழுபதி - தாமதம் என அதிகார தரப்பு காரணம் கூறுவதற்கு நாம் ஒருபோதும் இடமளித்துவிடக்கூடாது."  - எனவும் செல்வம் எம்.பி. குறிப்பிட்டார். 

Tags: