IMG-LOGO
Home செய்திகள் அடுத்து என்ன? 29 ஆம் திகதி கூடுகிறது தேசிய பேரவை!

அடுத்து என்ன? 29 ஆம் திகதி கூடுகிறது தேசிய பேரவை!

Date : 2022-Sep-27
IMG
தேசியக் கொள்கைகளை வகுப்பதற்கான 'தேசிய பேரவை' எனப்படும் நாடாளுமன்றத்தின் விசேட குழு நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் முறையாக கூடவுள்ளது. 

நாடாளுமன்ற வளாகத்தில் இக்கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.  

தேசிய பேரவையின் செயற்பாடுகள், அதற்கான எஞ்சிய நியமனங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

'தேசிய பேரவை'க்கு 32 உறுப்பினர்கள் கடந்த 23 ஆம் திகதி பெயரிடப்பட்டுள்ளனர்.  

ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி,  டலஸ் ஆதரவு அணிகள் தேசிய சபைக்கு தமது உறுப்பினர்களை நியமிக்கவில்லை. 

அத்துடன், சபாநாயகரால் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தாலும் அது தொடர்பில் இன்னும் முடிவு எடுக்கவில்லை என சில கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய பேரவைக்கு பெயரிடப்பட்டுள்ள உறுப்பினர்கள்

சபாநாயகர் தலைமையிலான தேசிய பேரவையில்,  பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர்,  சபை முதல்வர், ஆளுங்கட்சி பிரதம கொறடா ஆகியோர் பதவி நிலை உறுப்பினர்களாவர்.  

டக்ளஸ் தேவானந்தா,
நஸீர் அஹமட்,  
டிரான் அலஸ்,
சிசிர ஜெயகொடி, 
சிவநேசத்துரை சந்திரகாந்தன், 
ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, 
ரவூப் ஹக்கீம்,
பவித்ரா வன்னியாராச்சி,
வஜிர அபேவர்த்தன,
ஏ.எல்.எம் அத்தாவுல்லாஹ்,
திஸ்ஸ விதாரன, 
ரிசாத் பதியுதீன்,
விமல் வீரவன்ச,
வாசுதேவ நாணயக்கார, 
பழனி திகாம்பரம்,
மனோ கணேசன்,
உதய கம்மன்பில,
ரோஹித்த அபேகுணவர்த்தன,
நாமல் ராஜபக்ச, 
ஜீவன் தொண்டமான்,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
அத்துரலியே ரத்தன தேரர்,
அசங்க நவரட்ன,
அலி சப்ரி ரஹீம்,
சி.வி விக்னேஸ்வரன்,
வீரசுமன வீரசிங்க,
சாகர காரியவசம்

Tags: