IMG-LOGO
Home செய்திகள் மன்னிப்பு கோரினார் ரஞ்சன்! நாளை விடுதலையாகும் சாத்தியம்!!

மன்னிப்பு கோரினார் ரஞ்சன்! நாளை விடுதலையாகும் சாத்தியம்!!

Date : 2022-Aug-25
IMG
நீதித்துறை தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்துகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அவற்றை வாபஸ் பெறுவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

சத்தியக்கடதாசியின் மூலம் நீதிமன்றத்தில் அவர் மன்னிப்பும் கோரியுள்ளார்.

தனது கருத்துகளால் பிரதம நீதியரசர் உட்பட சட்டத்துறையிலுள்ள சகலருக்கும் அவமரியாதையை ஏற்படுத்தியமைக்காக மன்னிப்புக் கோருவதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துகளை வௌியிட மாட்டேன் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் தெரிவித்த  கருத்துகளுக்காக கடந்த வருடம் ஜனவரி 12 ஆம் திகதி ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த கருத்துகளை மீளப்பெறப்போவதில்லை என நீதிமன்ற வளாகத்தில்  தெரிவித்தமையினால், ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது.

அதேவேளை, சிறைவாசம் அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க நாளை (26) அல்லது 29 ஆம் திகதி திங்கட்கிழமை விடுதலை செய்யப்படுவார் என   சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
Tags: