நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை நோக்காகக் கொண்டு பரவலாக்கப்பட்ட அபிவிருத்தி திட்டம் உருவாக்கப்படும் போது மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் போது விசேட கொள்கையுடன் கூடிய மாற்றங்கள் அவசியம் என மட்டக்களப்பை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் முடிவானது.
பேராதனை பல்கலைக்கழக கலாநிதி திரு. ரமேஷ் ராமசாமி அவர்களின் பிரதான வள பங்களிப்புடன் நடைபெற்ற இந்த மாநாட்டை One Text Initiative எனும் நிருவனம் ஏற்பாடு செய்திருந்தது.
அரசாங்க கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ள விதம் மற்றும் அதன் படிநிலைகளில் உள்ளூராட்சி நிறுவனங்கள் உள்வாங்கப்பட்டுள்ள விதம், அரசாங்கம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் காணப்படக் கூடிய அதிகாரங்கள் மற்றும் சேவைகள் தொடர்பாக, அந்த நிறுவனங்களினூடாக மக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டு அதிகாரம் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை சென்றடைதல் மற்றும் நிதிவளம் பகிர்ந்தளிக்கப்படுதல் பற்றியும் இங்கு விலாவாரியாக கலந்துரையாடப்பட்டது.
அங்கு மிகவும் கவனம் செலுத்தப்பட்ட விடயம் யாதெனில் தங்களுடைய பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு வழங்கப்படக் கூடிய சேவைகள் மற்றும் அவற்றை நிறைவேற்றுவதில் உள்ளூராட்சி நிறுவனங்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் சம்பந்தமானவையாகும்.
அங்கு கீழ் காணப்படும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
உள்ளூராட்சி நிறுவனங்களின் தற்போதைய நிலை பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது. அங்கு அந்தந்த நிறுவனங்கள் கொண்டுள்ள வலு, குறைகள், தேவைகள் மற்றும் பயமுறுத்தல் தொடர்பாக பகுப்பாய்வு செய்வதற்கு உள்ளூராட்சி நிறுவனங்களின் அங்கத்தவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றது.
அவர்கள் அங்கு முன்வைத்த கருத்துக்களில் மிக முக்கியமான கருத்தாக திகழ்ந்தது மாகாண சபை முறைமை இல்லாமலாகும் நிலை ஏற்படும் என்பதாகும். ஏதோவொறு சந்தர்ப்பத்தில் அவ்வாறான நிலை ஏற்படுமேயானால் உள்ளூராட்சி நிறுவனங்களின் படிமுறைகளை வலுவானதாக மாற்ற புது மறுசீரமைப்பு மேலோங்கும் என்பது தொடர்பாக உள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு சிக்கலாகும் நிலை உள்ளது.
எவ்வாறாயினும் மாகாண சபை தேர்தல் உரிய காலப்பகுதியில் நடாத்தப்படாமை காரணமாக தற்போது பல வருடங்களாக மாகாண சபை உறுப்பினர்கள் இல்லாமல் இருக்கின்றனர். அவ்வாறெனில், மாகாண சபை ஒதுக்கீடுகள் பகிர்ந்தளிக்கப்படுவதில் முரண்பாடுகள் இருப்பது உள்ளூராட்சி நிறுவனங்களை நடாத்திச் செல்வதற்கு சவாலாக இருப்பதென்பது சிலரது அபிப்பிராயமாக காணப்பட்டது.
நீண்ட காலமாக நடைபெற்ற யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் துன்புறுத்தலுக்கு உள்ளான நிலையில் அபிவிருத்தி முரண்பாடுகள் காணப்படுவதானது உள்ளூராட்சி நிறுவனங்களை நடாத்திச் செல்வதில் சிக்கலை ஏற்படுத்தும் என்பது அவர்களது கருத்தாக காணப்பட்டது. அதே நேரம் அடிப்படை தேவையாக காணப்படும் குடிநீர் பற்றாக்குறை, விவசாயத்திற்கு போதிய நீர் வசதிகள் பற்றாக்குறையாக இருப்பது பிரதான சிக்கலாக இனங்காணப்பட்டது.
நிலத்தின் அமைப்பு மற்றும் சுற்றுச் சூழல் காரணிகளுக்கு ஏற்ப விவசாயம் மேற்கொள்ளும் இடங்களின் முன்னேற்றத்திற்கு உளவியல் காரணங்களை மேற்கொள்ள முடியுமானதோடு, சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு ஏதுவாக அமைவதும் முன்னேற்றத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டது.
எவ்வாறெனினும், புதிதாக உருவாகியுள்ள கொவிட் - 19 உலகளாவிய தொற்று நோய்க்கு மத்தியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அவர்கள் முகங்கொடுத்த பிரதான நெருக்கடியாக கொள்ளலாம். சீரான முறையில் பரவலாக்கள் அபிவிருத்தி திட்டம் செயற்படுத்தப்படுமேயானால் களப்பையொட்டிய மீனவத் தொழிலின் அபிவிருத்திக்கு முன்னுரிமை பெற்றுக் கொடுப்பதினூடாக பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு பாரிய வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என உள்ளூராட்சி நிறுவன உறுப்பினர்கள் பலரின் அபிப்பிராயமாக இருந்தது.
இது சம்பந்தமாக பரவலாக்கப்பட்ட அபிவிருத்தி திட்டம் செயற்படுத்தப்படும் போது மற்றும் வளங்கள் திறன்பட மற்றும் பயனுள்ள வகையில் முரண்பாடுகளற்ற நிலையில் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்வது தொடர்பாக விசேஷட கொள்கை மாற்றமொன்று அவசியமென்பது அவர்களது அவதானமாக இருந்தது. இது சம்பந்தமாக சகல அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கி சிறப்பான கலந்துரையாடல் உருவாக்கப்பட வேண்டும் என்பதும் ஜனநாயகத்தை வலுவாக்கதற்காக அது கட்டாயமாக இருப்பதாகவும் உள்ளூராட்சி நிறுவன உறுப்பினர்களின் கருத்தாக அமைந்திருந்தது.