ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், மேலும் எட்டு அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்தனர்.
ஜனாதிபதி மாளிகையில், பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
இதன்படி ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா , கடற்றொழில் அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவரான மஹிந்த அமரவீர கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பந்துல குணவர்தனவுக்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுடன் வெகுஜன ஊடக அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட கெஹலிய ரம்புக்வெல, இன்று நீர் வழங்கல் அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அதேவேளை, கடந்த வாரம் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராகப் பதவியேற்ற ரமேஷ் பத்திரண, இன்று கைத்தொழில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக விதுர விக்கிரமநாயக்கவும், நீர்ப்பாசனம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ரொஷான் ரணசிங்ஹவும் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
நஷீர் அஹமட்டுக்கு சுற்றாடல் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜனாதிபதி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும். இதன்போது 21 ஆவது திருத்தச்சட்டம் முன்வைக்கப்படவுள்ளது.