IMG-LOGO
Home புத்தகங்கள் வாராந்திர வணிக மற்றும் நிதி பகுப்பாய்வு

வாராந்திர வணிக மற்றும் நிதி பகுப்பாய்வு

Date : 2020-Nov-18
IMG

கடந்த வாரம், உள்நாட்டுச் சந்தையில் முக்கிய தலைப்பு அரிசி விலையை கட்டுப்படுத்துவதாகும், இதற்காக அரசாங்கம் ஒரு வர்த்தமானி அறிவிப்பை மீண்டும் அச்சிட வேண்டியிருந்தது. எனினும் அரசியின் விலை வார இறுதி வரை குறையவில்லை.


எனினும் அரசியின் விலை வார இறுதி வரை குறையவில்லை.


பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் உள்ளூர் சந்தைகள் மீண்டும் திறக்கப்படுவதனால்  காய்கறிகளின் விலையில் குறிப்பிடத்தக்க அளவு விலை அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது, என்றாலும் விவசாயிகளின் கையிருப்புக்களை சந்தைப்படுத்த  முடியாது போக அப்பிரதேசங்களிலே அழித்துவிட்டதாக வார இறுதி செய்தித்தாள்களில் செய்தி வெளியிட்டுள்ளன. அரசாங்கம் நான்கு பொருட்களுக்கு, அதாவது சீனி, பருப்பு, பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன் ஆகியவற்றுக்கு இருந்த ரூபா. 50/= ஆன இறக்குமதி வரியை 25 சதம் வரைக் குறைத்து ஒரு மாதம் கடந்த பின்னரும் புறக்கோட்டையில்  மொத்த சந்தையில் அப்பொருட்கள் முன்னைய விலையிலே விற்கப்பட்டன.


“அரசாங்கம் நான்கு பொருட்களுக்கு, அதாவது சீனி, பருப்பு, பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன் ஆகியவற்றுக்கு இருந்த ரூபா. 50/=  இறக்குமதி வரியை 25 சதம் வரைக் குறைத்து ஒரு மாதம் கடந்த பின்னரும் புறக்கோட்டையில்  மொத்த சந்தையில் அப்பொருட்கள் முன்னைய விலையிலே விற்கப்பட்டன.”


இவையனைத்தையும் உற்றுநோக்கும் போது, எமக்குத் தெளிவாவது யாதெனில் கோவிட் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிர்க்கதிக்கு உட்பட்டுள்ள பொது மக்களின் வாழ்க்கைச் செலவு மிக அதிகமாக உள்ளது என்பாகும்.


சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் சிறிதளவில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பும் சர்வதேச பங்கு விலைக் குறிகாட்டியில் நுாற்று சதவீதத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புக்கும் காரணமாக அமைவது இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும்   (PFIZER) நிறுவனம் ஆகியன கூட்டாக இணைந்து  உருவாக்கும் கோவிட்டுக்கான தடுப்பூசி சந்தைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பிலாகும்.


எனினும் இத்தடுப்பூசியைத் தயாரித்து, களஞ்சியப்படுத்தி உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுடன் உலகளவில் விநியோகிக்க இன்னும் ஒரு வருடம் ஆகலாம்.


ஐரோப்பாவில் கோவிட் வைரஸ் பரவுவிச் செல்லும் நிலை அதிகரித்துள்ளதுடன், இங்கிலாந்து, ஸ்பெயின், ஆஸ்திரியா மற்றும் பிரான்ஸ் ஆகியவை முற்றிலுமாக முடக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகள் மந்த கதியில் நடைபெற்று வருகின்றன.


இந்த நிலைமை அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை தொடரும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.


மேலும், கடந்த வாரம் எமது பிரதான துறைமுக செயல்பாட்டில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியானது  சர்வதேச வர்த்தகத்தில் பாரிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணமாக அமைவது துறைமுகத் தொழிலாளர்களிடையே கோவிட் 19 பரவுகையாகும்.


துறைமுக சேவைகளில் தாமதம் ஏற்பட்டதால் சுமார் 39 கப்பல்கள் துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக வதந்திகள் பரவியுள்ளதோடு, கொழும்பு துறைமுகத்தில் சுமார் 30% கொள்கலன்களைக் கையாளும் MSC நிறுவனம் அதன் கப்பல்களில் சுமார் 20 ஐ மற்ற துறைமுகங்களுக்கு திருப்பிவிட்டதாக ஒரு வார இறுதி செய்தித்தாள் தெரிவித்துள்ளது, ஆனால் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட எம்.எஸ்.சி நிறுவனம் இன்றைய தினம் துறைமுகத்தில் காணப்படும் நெரிசல் காரணமாக தாம் தற்காலிகமாக 20 கப்பல்களை வேறு துறைமுகங்களுக்கு அனுப்பியுள்ளதாக இலங்கை துறைமுகத்திற்கு அறிவித்துள்ளது.


துறைமுகத் தலைவர் தயா ரத்நாயக்கவும் துறைமுகத்தில் நெரிசல் இருப்பதை ஒப்புக் கொண்டு, பணியாளர்களுக்கு கடமைக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.


துறைமுகத் தலைவர் தயா ரத்நாயக்கவும் துறைமுகத்தில் நெரிசல் இருப்பதை ஒப்புக் கொண்டு, பணியாளர்களுக்கு கடமைக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

 

துறைமுகம் போன்று சுமார் 10,000 ஊழியர்கள் இருக்கும் சேவை நிலையங்கள், ஆடைத் தொழிற்சாலைகளில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் உள்ள  பணியிடங்களில் கடந்த காலங்களில் சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை முறையாக பின்பற்றப்பட்டிருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது என்பது எங்கள் கருத்தாகும்.


இதுபோன்ற பாரிய அளவிலான சேவை நிலையங்களுக்கு கோவிட் 19 பரவுவதைத் தடுக்க அரசாங்கமும், இராணுவமும், பொலீசாரும், சுகாதாரத் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கடந்த ஆறு மாதங்களினுள் தங்க ஆபரணங்களை அடமானம் வைப்பதற்காக வங்கிகளும் நிதி நிறுவனங்களும்  608  பில்லியன் ரூபா பெறுமதியான முற்பணத்தை வழங்கியுள்ளதாக அநேகமான ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதிலும், நிதி இராஜாங்க அமைச்சர் அத்தொகை 208 பில்லியன் ரூபா என தெரிவித்திருந்தார்.


கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பெரும் சர்ச்சைக்குள்ளானதும், துறைமுக தொழிற் சங்கத்தின் போராட்டத்திற்கும் உட்பட்ட   கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு ஜட்டியை கூட்டாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளுக்காக அரசினால் இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து செயற்படுவதாக அறிவித்திருந்தது - இலங்கை அரசுக்கு 51% மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 49% உம் கிடைக்கும் வகையில் கிழக்கு ஜெட்டியை அபிவிருத்தி செய்வதற்காக அவசியப்படும் அமைச்சரவைக் குறிப்பை  துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹிதா அபேகுணவர்தன அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். அத்தோடு,  மேலும் இத்திட்டத்தை மதிப்பீடு செய்ய தொழில்நுட்ப குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.


 CICT  ஜட்டியை 2016 ல் சீனாவிற்கு வழங்கியதால், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பானுக்கு அரசாங்கம் ஒப்படைக்க வேண்டியிருந்தது என்று இந்த துறையில் ஈடுபட்டுள்ள வணிகர்கள் கூறுகின்றனர். சீனா ஹார்பர் நிறுவனத்தால் இயக்கப்படும்  CICT ஜட்டி 2020 ஆம் ஆண்டில் அதன் செயல்பாடுகளுக்காக சிறந்த விருதினைப் பெற்றுக்கொள்வதற்கு முனைந்தது.


இலங்கைத்  தேயிலை குறித்து கடந்த வாரத்தில் நல்ல கேள்வி நிலவியது ஆனால் விலையில் எந்தவொரு அதிகரிப்பையும் கண்டு கொள்ள முடியாதிருந்தது.  போர்ப்ஸ் அன்ட் வாக்கர்ஸ் நிறுவனத்தின் கருத்துப்படி, கடந்த வாரம் 5.9 மில்லியன் கிலோகிராம் தேயிலை விற்பனை செய்யப்பட்டது என்பதாகும்.


பங்குச் சந்தையில் பிரதான நிறுவனமாக விளங்கும் ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இலங்கையின் முன்னணி வகிக்கும் நிறுவனக் குழுவொன்றாகும். ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் (JKH) தமது இரண்டாவது காலாண்டில் வலுவான செயல்பாட்டை வெளிப்படுத்தியதுடன், குழுவின் பயணங்கள் மற்றும் ஓய்வு பிரிவைத் தவிர ஏனையவை 15% இனால் வளர்ச்சியடைந்தது. அது வணிகத்தின் வலுவான மீட்சியைக் காட்டுகின்றது.


நிறுவனத்தின் தலைவர் கிரிஷன் பலேந்திரா தனது மதிப்பாய்வில் தெரிவிக்கும் போது, மீளாய்வு ஆண்டிற்கு உட்பட்ட வருடத்தின் இரண்டாம் காலாண்டில் ஓய்வு நேரத் தொழிலைத் தவிர்த்து,  EBITDA  குழுமம் 4.50 பில்லியன் மதிப்புடையதாக காணப்பட்டதோடு, இது முந்தைய ஆண்டை விட 15% அதிகரித்துள்ளது என்பதாகும்.


இலங்கையின் முன்னணி ஏற்றுமதி நிறுவனங்களில்  ஒன்றான ஹேலீஸும் 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வரிக்கு முந்தைய இலாபம் 5.52 பில்லியன்  ரூபாவாக அறிக்கையிட்டுள்ளதுடன், முக்கியமாக சந்தை முற்பண வட்டி விகிதங்கள் குறைவாக இருந்ததால், இது நிறுவனத்தின் வட்டி செலவுகளைக் குறைக்கவும் அதன்மூலம் இலாபத்தை அதிகரிக்கவும் உதவியாக அமைந்தது என அறிவித்துள்ளார்.


2020 செப்டம்பர் மாதத்தில் இலங்கை அரசாங்கத்தின் வர்த்தக நிலுவைப் பற்றாக்குறை 525 மில்லியன் டொலராகக் காணப்பட்டது. அதுவானது 2019 ஆம் ஆண்டில் அம்மாதத்தில் அறிக்கையிடப்பட்ட 757 மில்லியன் டொலருக்கு ஒப்பீட்டளவில் குறைந்த பெறுமதியாகும். இதற்குக் காரணமாக அமைவது அரசினால் கடந்த  மே முதல் மோட்டார் வாகனங்கள், டைல்கள், டயர்கள், கார் உதிரிப் பாகங்கள் மற்றும் பிற பொருட்கள் சுமார் 175  இற்கான இறக்குமதிக்கான தடைவிதிப்பாகும்.


மேலும், மஞ்சள்  உள்ளிட்ட 19  உணவுப் பயிர்களை இறக்குமதி  முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன்,  உள்ளூர் பயிர் வகைகள் தற்போது எந்த அளவு சந்தைக்கு வருகின்றன? அவற்றின் விலைகள் குறைந்துள்ளனவா? போன்ற விடயங்கள் மக்களுக்கு அந்தரங்கமாகவே உள்ளது!!


மேலும், மஞ்சள்  உள்ளிட்ட 19  உணவுப் பயிர்களை இறக்குமதி  முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன்,  உள்ளூர் பயிர் வகைகள் தற்போது எந்த அளவு சந்தைக்கு வருகின்றன? அவற்றின் விலைகள் குறைந்துள்ளனவா? போன்ற விடயங்கள் மக்களுக்கு அந்தரங்கமாகவே உள்ளது!!

 

அரசாங்க திறைசேரியின் புள்ளிவிவரங்களின்படி, 2020 ஆம் ஆண்டிற்கு அரசாங்கம் மேலும் 71 பில்லியன் டொலர் கடன் வாங்க வேண்டியிருக்கும்.


அரசாங்க திறைசேரியின் புள்ளிவிவரங்களின்படி, 2020 ஆம் ஆண்டிற்கு அரசாங்கம் மேலும் 71 பில்லியன் டொலர் கடன் வாங்க வேண்டியிருக்கும். நிதிப் பற்றாக்குறையில் உள்ள  அரசாங்கத்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் 613.45 பில்லியன் டொலரைக் கடனாகப் பெற முடியும் என்று பாராளுமன்றத்தினால் இடைக்கால ஒதுக்கீட்டதிகாரச் சட்டத்தினால் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது .


என்றாலும், கோவிட்டின் இரண்டாவது அலை காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள கூடுதல் செலவுகளை ஈடுசெய்ய  2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு அதிகாரச் சட்டத்தில் 180 பில்லியன் டொலர் சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் இது வாக்களிக்காமல் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்பது மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும்.


சனாதிபதி உட்பட அரசாங்கம் ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறை காட்டியிருந்தாலும், ஒக்டோபர் மாதம் பொருட்களின் ஏற்றுமதி வருவாயில் சரிவைக் காட்டியுள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி வருவாய் 977.3 மில்லியன் டொலர்கள் ($ 977.3) ஆக உள்ளதோடு, இது 2020 ஒக்டோபர் மாதத்தில் 831.72 மில்லியன் டொலர் வரை குறைந்திருந்தது.


இலங்கையின் வர்த்தக ஏற்றுமதி வருவாயை  மாதாந்தம் 1,000 மில்லியன் டொலர் அளவு  பேணிச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.


அடுத்த வாரத்தில் -

கோவிட் 19  நெருக்கடிக்கு அரசினால் வழங்கப்பட்டுள்ள  தூண்டுதல் தொகுப்புகளைப் பற்றி கலந்துரையாடுவோம்.

 

-சேன சூரியப்பெரும-

-பொருளாதார ஆய்வாளர்.-

 

Tags: