IMG-LOGO
Home வலைப்பதிவுகள் வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று

வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று

Date : 2020-Nov-18
IMG

பாராளுமன்றம் இன்று (18) காலை 9.30 மணிக்கு கூடவுள்ள நிலையில் வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இதன்போது இடம்பெறவுள்ளது.



2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் 4 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. அதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.



இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. மேலும் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.



வரவுச் செலவு திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.



இந்த முறை வரவுச் செலவு திட்டம் மீதான விவாத நாட்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப் படமாட்டார்கள் என பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வுகள் காலை 9.30 முதல் மாலை 5.30 வரை இடம்பெறவுள்ளது.

இவ்வாறு வரவுச் செலவுத் திட்டம் சமர்பிக்கப்படுவது முதல் அது தொடர்பான விவாதங்கள் இடம்பெறும் நாட்களில் முற்று முழுதாக சுகாதார வழிமுறைகளை கைக்கொள்வதற்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *